X
டாக்டர்

டாக்டர்

Comedy | Drama | Thriller | 09 Oct 2021 | U/A | 148 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

டாக்டர் கதை

டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே ப்ரோடுக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் காபி முறையில் தயாரித்து, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் நகைச்சுவை கலந்த ஒரு அதிரடி திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டன, ஆனால் கொரோனா நோய் பரவல் காரணத்தால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இப்படம் 2021 அக்டோபர் 9ல் திரையரங்குகளில் வெளியானது. டாக்டர் படத்தில் பணியாற்றிய படக்குழு மற்றும் திரை நட்சத்திரங்கள் டாக்டர் படத்தின் புகைப்படங்கள் டாக்டர் படத்தின் டிரைலர், பாடல்கள் போன்ற அணைத்து வீடியோக்களின் தொகுப்பு டாக்டர் திரைப்படத்தின் கதை கதைக்கரு: சிறுமிகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்கும் (ஹியூமன் ட்ராபிக்கிங் நெட்வொர்க்) தொழில் செய்யும் வில்லன் (வினை ராய்) கும்பலை, ஒரு டாக்டர் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார் என்பதே படத்தின் கதைக்கரு. இதனை ஒரு நகைச்சுகை மற்றும் திரில்லர் பாணியில் இயக்கியுள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். கதை: ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றும் வருண் (சிவகார்த்திகேயன்) ஒரு குடும்ப நிகழ்ச்சியில் நாயகி பத்மினி (பிரியங்கா மோகன்)-யை காண்கிறார். கண்டதும் நாயகியை காதலிக்க தொடங்குகிறார், நாயகன். ஒரு கட்டத்தில் சிவகார்த்தியுடன் நிச்சியமான திருமணத்தை வேண்டாம் என நிறுத்துகிறார், நாயகி பிரியங்கா மோகன். இதனை அடுத்து நாயகியின் அண்ணன் மகள் திடீரென சில மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். அந்த சிறுமியை தேடும் பணியில் சிவகார்த்திகேயன் ஈடுபடுகிறார். இந்த தேடுதல் வேட்டையில் பல உண்மைகளை அறியும் சிவகார்த்திகேயன் ஒரு வியூகத்தை அமைத்து வில்லனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். வில்லனாக சிவா (வினய் ராய்), இவர் அப்பாவி சிறுமிகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்கும் (ஹியூமன் ட்ராபிக்கிங் நெட்வொர்க்) தொழில் செய்கிறார். இவரை கண்டு பிடிக்கும் முயற்சியில் சிவகார்த்திகேயன் செய்த திட்டங்கள் தான் இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.  டாக்டர் திரைப்படம் பற்றிய பிரத்யேக தகவல்கள்  சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 9ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவுப்பு அதிகாரப்பூர்வமாக 2019 டிசம்பர் மாதம் வெளியானது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தமிழ் திரையுலகில் கோலமாவு கோகிலா திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பனும் ஆவார். இத்திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் தமிழ் திரையுலகில் 18வது திரைப்படமாகும். இப்படத்தின் தலைப்பு மற்றும் படக்குழு பற்றிய தகவலை 2019 டிசம்பர் 2ம் தேதியில் ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். டாக்டர் திரைப்படத்தில் சிவர்கார்த்திகேயனுடன் பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், யோகி பாபு, அர்ச்சனா வி.ஜே, இளவரசு என தமிழ் திரைப்பட முன்னனி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நாயகி பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லமா பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்து மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அடுத்தடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் மற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுள்ளது. டாக்டர் படத்திற்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன, காரணம் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தினை இயக்குகிறார்.  டாக்டர் படத்தின் பட்ஜெட் மற்றும் வியாபார விவரங்கள்   டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரோடுக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் காபி முறையில் தயாரிக்கப்பட்டு - கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே இப்படத்தின் அதிகாரப்பூர்வமான நேரடி தயாரிப்பாளர் கொட்டப்படி ஜே ராஜேஷ் ஆவார்.  இப்படம் மொத்தம் 55 கோடி என படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சிவகார்த்தியின் முந்திய திரைப்படமான 'ஹீரோ' திரைப்படம் சரியான வசூல் சாதனை இல்லாததால், இப்படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் காபி முறையில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளம் பெற்றுள்ளார் மற்றும் தயாரிப்பு செலவு 15 கோடி என மொத்தம் 45 கோடிகள் செலவாகியுள்ளது. மொத்தம் 45 கோடி செலவில் உருவாக்கப்பட்ட டாக்டர் திரைப்படம், தமிழக தியேட்டர் பிசினஸ் மட்டும் 27.60 கோடிகளுக்கு விநியோக செய்யப்பட்டுள்ளது. ஓவர்சீஸ் ரைட்ஸ் 6.25 கோடி, கர்நாடக தியேட்டரிக்கல் ரைட்ஸ் 75 லட்சம்  என விற்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ்  1.5 கோடியும், ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 4 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் தொலைக்காட்சி உரிமை மொத்தம் 9 கோடிகளுக்கு சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. பின் இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ( நெட்ப்ளிக்ஸ் ) 11 கோடிகளுக்கு, ஆடியோ ரைட்ஸ் ( சோனி நிறுவனம் ) 2.5 கோடிகளுக்கும் பிசினஸ் செய்யப்பட்டு மொத்தம் 35 கோடிகளுக்கு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் மொத்தம் பட்ஜெட் 45 கோடிகள் ஆகும். இப்படத்தின் மொத்தம் பிசினஸ் 62.60 கோடிகள் . இப்படம் வெளியீட்டிற்கு முன்பாகவே 12 கோடிகள் லாபத்தில் உள்ளது.
Read More

டாக்டர் நடிகர்கள் & படக்குழுவினர்

டாக்டர் அணியின் தகவல்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார்
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்
தொகுப்பாளர் நிர்மல்
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், கொட்டப்படி.ஜே.ராஜேஷ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டாக்டர் விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
டாக்டர் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
பிஹைண்ட்வுட்ஸ்
சிவகார்த்திகேயன் & நெல்சன் கூட்டணியிலான ஆக்ஷன் - காமெடி பொழுதுபோக்கு படம் 'டாக்டர்'.
மாலை மலர்
மொத்தத்தில் ‘டாக்டர்’ சிறப்பானவர்.
பில்மிபீட் - விமர்சனம்
படத்தின் பல முக்கியமான சீரியஸான காட்சிகளில் கூட காமெடி விஷயங்களை சொருகி அனைவரையும் சிரிக்க வைத்தது போல் மக்கள் மனநிலையை புரிந்துகொண்டு பல இன்னல்கள் நடுவே தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரு ஜாலியான காமெடி படம் டாக்டர்.

டாக்டர் ட்ரெய்லர்

Video Thumbnail

டாக்டர் செய்திகள்

டாக்டர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டாக்டர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+