X
தமிழ் » திரைப்படங்கள் » ஹலோ நான் பேய் பேசுறேன்
ஹலோ நான் பேய் பேசுறேன்

ஹலோ நான் பேய் பேசுறேன்

Comedy | 01 Apr 2016 |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

ஹலோ நான் பேய் பேசுறேன் கதை

ஹலோ நான் பேய் பேசுறேன் தமிழ் நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை எஸ் பாஸ்கர் இயக்க, சுந்தர் சி  தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வி டி வி கணேஷ் மற்றும் கருணாகரன் போன்றோர்  நடிக்க, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். கதை : நாயகன் வைபவ் தனது பல்வேறு இடங்களில் திருடி தனது நண்பர்களுடன் சுதந்திரமாக சுற்றும் இளைஞன். வி டி வி கணேசிற்கு தங்கையாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்யை வைபவ் காதலிக்க ஆரம்பிக்கின்றார். அதே நேரத்தில், தற்செயலாக ஒரு செல் போனை கண்டெடுக்கின்றார்.அந்த போனில் இருந்து கால் வருகின்றது. வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், வி டி தி கணேஷ் மற்றும் கருணாகரன் மாட்டிக்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும், அந்த  போனிடம் மாட்டிகொண்டு படும் அவதி அனைத்தும் திகில் கலந்த நகைச்சுவையாகயாக கதை நகர்கிறது.
Read More

ஹலோ நான் பேய் பேசுறேன் நடிகர்கள் & படக்குழுவினர்

ஹலோ நான் பேய் பேசுறேன் அணியின் தகவல்

இயக்குனர் எஸ் பாஸ்கர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சித்தார்த் விபின்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பேய்கள் (சீஸன்) ஓய்வதில்லை என்பதை தமிழ் சினிமா கால காலமாக மெய்ப்பித்து வருகிறது. இந்த வெள்ளிக்கிழமை வெளியான நான்கு படங்களில் இரண்டு பேய்ப் படங்கள் என்றால், பேய்கள் ஆதிக்கம் கோடம்பாக்கத்தில் எந்த அளவுக்கு கொடிகட்டிப் பறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்தப் படத்தில் பேயை உருட்டி உருட்டி மரப்பாச்சி விளையாடியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பேய் பெரிதாக பயமுறுத்தவில்லை. ஏதோ பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி கொஞ்சம் மென்மையாகவே வந்து போகிறது. ஆனால் பேய் வருவதற்கு முந்தைய முக்கால் மணி நேரப் படம் செம கலகலப்பு. பாஸ்கரின் டைமிங் வசனங்கள் நான் ஸ்டாப் சிரிப்புக்கு உத்தரவாதம். வைபவ் இந்தப் படத்தில்தான் இயல்பாக நடித்திருக்கிறார். பக்கா சென்னை லோக்கல் பார்ட்டியாக குத்தாட்டத்திலும் வெளுக்கிறார். ஐஸ்வர்யாவுடனான அவரது காதலின் பின்னணி புதுசாக இருக்கிறது. சேட்டு, சேட்டு என இருவரும் லவ்வும் இடங்கள் அழகு. வழக்கமாக தமிழ்ப் பேயை ஓட்ட மலையாள மந்திரவாதி, அல்லது கோவலம் தர்க்கா பாய்களைக் காட்டுவது வழக்கம். இந்தப் படத்தில் இந்தி மந்திரவாதிகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். கொஞ்சம் புதுசாகத்தான் இருக்கிறது. வழக்கமான சுந்தர் சி பாணி சிரிப்புப் பேய்ப் படம் எடுப்பதுதான் இயக்குநர் பாஸ்கரின் நோக்கம். முதல் பாதியில் பேயில்லாமலே அது நிறைவேறியிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு பேயிருந்தும் தடுமாறுகிறது.

ஹலோ நான் பேய் பேசுறேன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஹலோ நான் பேய் பேசுறேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+