»   »  சுந்தர் சி. தயாரிப்பில் மிரட்ட வருகிறது 'ஹலோ நான் பேய் பேசுறேன்....'

சுந்தர் சி. தயாரிப்பில் மிரட்ட வருகிறது 'ஹலோ நான் பேய் பேசுறேன்....'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரண்மனை 2 வைத் தொடர்ந்து அடுத்ததாக ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்தை, சுந்தர்.சி தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அரண்மனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பேய்களை ஆரம்பித்து வைத்த சுந்தர்.சி அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை 2 படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்.

த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா மற்றும் சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திற்கு அரண்மனை 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு பேய்ப் படத்தை தயாரிக்கவிருக்கிறார் சுந்தர்.சி.

அரண்மனை

அரண்மனை

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குநர் என்று பெயரெடுத்த சுந்தர்.சி கடந்த ஆண்டில் அரண்மனை படத்தை எடுத்து கோலிவுட்டில் பேய்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தார். அரண்மனை படம் எதிர்பார்த்ததைவிட வசூலை வாரிக் குவித்தது, தொடர்ந்து தற்போது தமிழின் முன்னணி நாயகிகளான த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து அரண்மனை 2 படத்தையும் எடுத்திருக்கிறார். அடுத்த வருடத்தில் அரண்மனை 2 வெளியாகிறது.

நான் பேய் பேசுறேன்

நான் பேய் பேசுறேன்

அடுத்ததாக பேய்களை அடிப்படையாக வைத்து ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்தை தயாரிக்கவிருக்கிறார் சுந்தர்.சி. வழக்கம் போல தானே இயக்குவார் என்று எதிர்பார்த்தால் அறிமுக இயக்குநர் பாஸ்கர் என்பவரை இயக்குனராகப் போட்டு, வெறுமனே படத்தை மட்டும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி.

நாளைய இயக்குனர்

நாளைய இயக்குனர்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் போட்டியில் நடுவராகக் கலந்து கொண்ட சுந்தர்.சி, பாஸ்கரின் குறும்படத்தைப் பார்த்து வியந்து இந்த வாய்ப்பை அவருக்கு அளித்திருக்கிறார் என்று கூறுகின்றனர். படத்தில் நாயகனாக வைபவ் நடிக்க நாயகிகளாக ஓவியா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

மொபைல் வழியாக

மொபைல் வழியாக

இதுவரை எத்தனையோ வழிகளில் பேயைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் புதிதான வழியில் பேயைப் பார்க்கவிருக்கின்றனர். ஆமாம் தமிழ் சினிமாக்களில் முதல்முறையாக மொபைல் வழியாக இந்தப் படத்தில் பேய் வரவிருக்கிறது. ஆனால் இதில் நடிக்கும் யாரும் பேயாக நடிக்கவில்லையாம். விரைவில் இந்தப் படம் தொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் எப்படியெல்லாம் பேயைக் காட்டப் போறாங்களோ...

English summary
Hello Nan Paei Pesuren Next Horror Movie in Tamil Cinema Directed by Debut Bhaskar, The Official Announcement will be Released Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil