»   »  ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2, உயிரே உயிரே, நாரதன் இன்றைய மோதலில் வெற்றி யாருக்கு?

ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2, உயிரே உயிரே, நாரதன் இன்றைய மோதலில் வெற்றி யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2, உயிரே உயிரே, நாரதன் என்று 4 படங்கள் வெளியாகியுள்ளன.

உயிரே உயிரே ஹன்சிகா தவிர முன்னணி ஹீரோ, ஹீரோயின் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு யாரின் படங்களும் இந்தப் பட்டியலில் இல்லை.


பேய், காதல், காமெடி என்ற வரிசையில் இன்று வெளியாகியிருக்கும் படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.


ஹலோ நான் பேய் பேசுறேன்

ஹலோ நான் பேய் பேசுறேன்

சுந்தர்.சி தயாரிப்பில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா நடித்துள்ளனர். செல்போனில் இருந்து பேய் கிளம்புவது போல இப்படத்தின் கதையை எடுத்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 250 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளது. செல்போன் பேய் வைபவ், ஓவியாவைக் காப்பாற்றுமா? பார்க்கலாம்.


டார்லிங் 2

டார்லிங் 2

கடந்தாண்டு வெளியாகி ஹிட்டடித்த டார்லிங் படத்தின் 2 வது பாகமாக இப்படம் வெளியாகியுள்ளது. கலையரசன், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படமும் பேயை வைத்தே எடுக்கப்பட்டுளள்ளது. முதலில் ஜின் என்று பெயர் வைத்து பின்னர் டார்லிங் 2 என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படத்தின் பெயரை மாற்றினார். மெட்ராஸ் படத்துக்குப் பின் சொல்லிக்கொள்ளும்படி கலையரசனுக்கு வேறு எந்தப் படமும் அமையவில்லை. டார்லிங் பேய் கலையரசனுக்கு கைகொடுக்குமா? பார்க்கலாம்.


உயிரே உயிரே

உயிரே உயிரே

ஹன்சிகா, சித்து நடித்திருக்கும் படம் உயிரே உயிரே. மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த சொந்த செலவில் நடிகை ஜெயப்பிரதா இப்படத்தை தயாரித்திருக்கிறார். பலமுறை தள்ளிப் போன இப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. 2 பேய்களுக்கு மத்தியில் இன்று வெளியாகும் இந்தக் காதல் காவியம் எடுபடுமா? என்பது சந்தேகம் தான்.


நாரதன்

நாரதன்

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நகுல், பிரேம்ஜி அமரன், நிகேஷா பட்டேல் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் படம் நாரதன். நாகா வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். சம்பளப் பிரச்சினைகளால் பலமாதங்கள் கிடப்பில் கிடந்த நாரதன் ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படம் நகுலைக் காப்பாற்றியிருந்தது. அதுபோல நாரதனும் நகுலுக்கு கைகொடுக்குமா? பார்க்கலாம்.


எந்த முன்னணி நடிகரின் படமும் இன்று வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



English summary
Today Released Movies List- Hello Naan Pei Pesuren,Darling 2, Narathan, Uyire Uyire.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil