»   »  ஏப்ரல் 1 முதல் வைபவ்-ஓவியாவின் 'ஹலோ நான் பேய் பேசுறேன்'

ஏப்ரல் 1 முதல் வைபவ்-ஓவியாவின் 'ஹலோ நான் பேய் பேசுறேன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும், ஹலோ நான் பேய் பேசுறேன் திரைப்படம் ஏப்ரல் 1 ம் தேதி வெளியாகிறது.

சித்தார்த் விபின் இசையமைப்பில் அறிமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியிருக்கும் படம் ஹலோ நான் பேய் பேசுறேன்.


இதில் வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கம்புலி, கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அரண்மனை, அரண்மனை 2 என்று அடுத்தடுத்து 2 பேய்ப்படங்களை கொடுத்த சுந்தர்.சி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.ஒரு செல்போனில் இருந்து பேய் வருவது போல இப்படத்தை வித்தியாசமாக பாஸ்கர் இயக்கியிருக்கிறார்.இந்நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது.


அதன்படி வருகின்ற ஏப்ரல் 1 ம் தேதி ஹலோ நான் பேய் பேசுறேன் படம் உலகெங்கும் வெளியாகவுள்ளது.


செல்போன் பேய் மிரட்டுமா? பார்க்கலாம்.


English summary
Vaibav Starrer Hello Naan Pei Pesuren Release date now Announced.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil