»   »  'ஹலோ நான் பேய் பேசுறேன்' காமெடி... செல்போன் பேயைப் பாராட்டும் ரசிகர்கள்

'ஹலோ நான் பேய் பேசுறேன்' காமெடி... செல்போன் பேயைப் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் ஹலோ நான் பேய் பேசுறேன்.

அரண்மனை, அரண்மனை 2 என்று பேய்களை வைத்து, அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்த சுந்தர்.சி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.


ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிட்டிருக்கும் இப்படம் தமிழ்நாடு முழுவதும், சுமார் 250க்கும் மேலான திரையரங்குகளில் இன்று வெளியாகியிருக்கிறது.


செல்போன் பேய் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.


மஹத்

'ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் மூலம் நண்பன் வைபவ்விற்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க வாழ்த்துகிறேன்' என்று நடிகர் மஹத் வாழ்த்தியிருக்கிறார்.
பேய் என்ட்ரி

படம் ஆரம்பிச்ச 40வது நிமிஷத்துல பேய் என்ட்ரி ஆகுது என்று செல்போன் பேயின் வரவைக் கூறியிருக்கிறார் சரவணன்.


கவிதா நீ மட்டும்

ஒரு காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாடி திரும்ப அங்கே பேய் தலைவிரி கோலமாக நின்று கொண்டிருக்கிறது. இந்தக் காட்சியை ஜிப் பார்மேட்டில் கொடுத்து பயமுறுத்துகிறார் ரியாஸ்.


தளபதி

கத்தி படத்தின் பிஜிஎம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என மகிழ்ச்சியுடன் பரத் தெரிவித்திருக்கிறார். இதைப்போல மேலும் பல ரசிகர்களும் இப்படம் நன்றாக இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மொத்தத்தில் ஹலோ நான் பேய் பேசுறேன் - காமெடி..English summary
Vaibav, Aishwarya Rajesh, Oviya Starrer Hello Naan Pei Pesuren Released Worldwide Today, Written&Directed by S.Baskar -Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil