X
ஜோக்கர்

ஜோக்கர்

Social | 12 Aug 2016 | U |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

ஜோக்கர் கதை

ஜோக்கர் இயக்குனர் ராஜுமுருகனின் அடுத்த படைப்பு. இத்திரைப்படத்தில் பல்வேறு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சீன் ரோல்டன். கதை : ஒரு சாதாரண மனிதன் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறிக்கொண்டு ஊரில் சுற்றுகிறார். அவர் பெயர் மன்னர் மன்னர். அவருடன் ஒரு வயதான பெரியவர் எதற்க்கெடுத்தாலும் பெட்டிக்கேஸ் கொடுத்துக்கொண்டும், ஒரு பெண் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் புகைப்படமெடுத்து, பேஸ்புக்கில் போட்டும், மற்ற பதிவுகளுக்கு கருத்துக்களை தெரிவிக்கிறார். இம்மூவர் தான் கதையின் வேர். மன்னர் மன்னராக வரும் குரு சோமசுந்தரம், ஊர்களில் நடக்கும் பல அநியாயங்களை தட்டி கேட்பதுடன், அரசியலில் நடக்கும் குற்றங்களை சுட்டிக்காட்டுகிறார். தன் மனைவியையே கருணை கொலை செய்ய மனு அளிக்கிறார். ஒரு சாதாரண கழிப்பறை கட்டுவதில் கூட எவ்வளவு மோசடிகள் நடக்கின்றது இந்த சமூதாயத்தில் என்ற கருத்தை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர் ராஜு முருகன்.
Read More

ஜோக்கர் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜோக்கர் அணியின் தகவல்

இயக்குனர் ராஜு முருகன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜோக்கர் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
யாரையும் நம்ப முடியாத இன்றைய உலகில், எவ்வளவு பெரிய அநியாயம் அல்லது கொடுமையையும் வேடிக்கையாய் கடந்து போகும்.. அல்லது குதற்கக் கேள்வி எழுப்பி நீர்த்துப் போகச் செய்யும் இன்றைய வக்கிரம் பிடித்த சூழலில் இப்படி ஒரு சினிமா சாத்தியமா? அதை சென்சார் அனுமதிக்குமா? இரண்டுமே நடந்திருக்கிறது... விளைவு ஜோக்கர்! 'இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னா... பேள்றதும் கஷ்டமாப் போச்சே' என படத்தில் ஒரு பாத்திரம் பேசும் வசனம்தான் படத்தின் மையக் கரு. டாய்லட் கட்டுவதில் கூட எந்த அளவு கொள்ளையடிக்கிறார்கள் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் என்பதை இத்தனை பட்டவர்த்தனமாக இதுவரை யாரும் காட்சிப்படுத்தியதில்லை. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் எங்கள் ஊரைச் சுற்றிய 12 கிராமங்களில் நடந்த தொகுப்பு வீடு கட்டுதல், அம்மா வீடு கட்டுதல் மற்றும் இலவச கழிப்பிடம் கட்டுவதில் நடந்த கேவலங்களைக் கண் முன்னே நிறுத்தின. இதேமாதிரிதான் கலர் கலர் கதவுகளைப் பின்னணியில் வைத்து புகைப்படம் எடுத்து அனுப்பி, ஒரு கக்கூஸ் தொட்டியை மட்டும் கையில் கொடுத்து அனுப்பினார்கள் அதிகாரிகள். வீடுகட்ட அரசு ஒரு லட்சம் ஒதுக்கினால், அதில் 50 ஆயிரம் கூட கைக்கு வராத நிலைதான் இன்றும் கிராமங்களில். இடிந்து விழுந்த கழிப்பிடத்துக்குள் சிக்கி முக்கால் உயிரை விட்ட கர்ப்பிணிப் பெண்ணை, ஜனாதிபதி பேசிவிட்டுப் போகும் வரை பெஞ்சில் கிடைத்திவிட்டு, கத்தும் அவள் கணவனை வீட்டுக்குள் அடைக்கும் கொடூரம்தான் இந்த நாட்டில் அவ்வப்போது கொண்டு வரப்படும் திட்டங்களின் லட்சணங்கள். ஹெலிகாப்டரைப் பார்த்துக் கும்பிடும் கேவலத்தையும், அரை மணி நேர உண்ணாவிரத அற்பத்தனைத்தையும் தொட தனி தைரியம் வேண்டும். பலப்பல நூதன போராட்டங்களை ராஜு முருகன் இதில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவை இனி செயல்வடிவம் பெறும் காலமும் வரும். சீன் ரோல்டனின் இசையை விட, யுக பாரதியின் சவுக்கடி வரிகள் பாடல்களைக் கவனிக்க வைக்கின்றன. எடிட்டர் வேலுசாமி இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம் பின்பாதி காட்சிகளை. செழியனின் ஒளிப்பதிவு தர்மபுரியின் வறண்ட கிராமங்களை அசலாகக் காட்டியுள்ளது. ஏபிசி என்று ஏரியா பார்க்காமல் போய்ச் சேர்க்கப்பட வேண்டிய படைப்பு இது.

ஜோக்கர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜோக்கர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+