காஞ்சனா 3 கதை
காஞ்சனா 3 இயக்குனர் ராகவா லாரன்ஸ் தானே இயக்கி நடிக்கும் நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படமானது காஞ்சனா பட வரிசையின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. மேலும், இத்திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். பின்னர் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் இப்படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் தயாரிக்க, இசையமைப்பாளராக டூபாடூ இசைக்குழு இசையமைத்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி, சத்யராஜ், கோவை சரளா, கபீர் துஹன் சிங், நெடுமுடி வேணு, மனோபாலா, சூரி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, மயில்சாமி, யோகி பாபு என்று முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் "யு/ஏ" சான்றிதழை பெற்று 2019 ஏப்ரல் 19ல் கோடைவிருந்தாக வெளிவரவுள்ளது. கதை ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், வெளிநாட்டில் இருந்து தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி மற்றும் இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தன் தாத்தா டெல்லி கணேசனின் 60-ஆம் திருமணத்திற்காக செல்கிறார்கள். போகும் வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி சாப்பிட முடிவு செய்கின்றனர். அங்கே மரம் ஒன்றில் மிக கொடூரமான பேய் ஒன்றை ஆணியில் அடித்து வைக்க, அதை லாரன்ஸ் யதார்த்தமாக பிடுங்கி விடுகிறார், பின்னர் அங்கிருந்த பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது. கோவையில் தாத்தா வீட்டிற்கு பேயுடன் வரும் ராகவா லாரன்சின் தாய் மாமாக்களின் மகள்கள் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். அவர்களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருக்கிறார் ராகவா லாரன்ஸ். பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. பின்னர் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள். இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது. ராகவா லாரன்ஸ் மீது அவருக்கே தெரியாமல் அழைத்து வந்த ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு ஆவிகள் ஏறுகிறது. அவ்வாறு ஏறிய ஆவிகள் மந்திரம் தந்திரத்திற்கு எல்லாம் அடங்க மறுத்து சிலரை விரட்டி விரட்டி வெட்டி வீழ்த்தி பழிவாங்குகிறது. அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வருகிறது. கடைசியில், லாரன்ஸ் உடலில் பேயாய் வந்தவரின் முன்கதை என்ன? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.
Read More