X
தமிழ் » திரைப்படங்கள் » ஓ மை கடவுளே
ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

Comedy | 14 Feb 2020 | U/A | 154 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

ஓ மை கடவுளே கதை

ஓ மை கடவுளே இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தனது 'அக்ஸ்ஸ் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலாட்டாவில் உருவாகியுள்ள இப்படத்தினை, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் பூபதி செல்வராஜ் இப்படத்திற்கு எடிட்டிங் பணிசெய்துள்ளார்.  ஓ மை கடவுளே திரைப்படத்தினை பற்றிய பிரத்தியேக தகவல்கள் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' தெய்வமகள் ' தொடரில் நடித்து புகழ்பெற்ற வாணி போஜன் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். ஷா ரா, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்குழு :  இப்படத்தில் பணியாற்றி இருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய புகைப்படங்கள் :  ஓ மை கடவுளே திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு இப்படத்தின் போஸ்டர் மற்றும் அறிவிப்புகள் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதள பக்கத்தில் வெளியாகி பிரபலமானதை தொடர்ந்து, இப்படத்தின் டீஸர் 2019 அக்டோபர் 17ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. இப்படத்தின் நாயகனான அசோக் செல்வன் ' சூது கவ்வும் ' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் இவர்களின் நட்புக்காக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் இப்படத்தில் நடித்துள்ளனர். ஓ மை கடவுளே திரைப்படத்தின் கதை இப்படத்தின் நாயகன் அசோக் செல்வன் மற்றும் நாயகி ரித்திகா சிங் இருவரும் சிறுவயதிலிருந்து நண்பர்களாக பழகி வருகின்றனர். ஒரு கட்டத்தில் தான் பழகாத ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ அஞ்சும் ரித்திகா, தன்னை பற்றி முற்றிலும் அறிந்த தனது நெருங்கிய நண்பனான அசோக் செல்வனை மணந்து ஒரு நல்ல புரிதலில் வாழ விரும்புகிறார். இதனை நாயகனிடம் தெரிவித்து இருவரும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். சிறுவயதிலிருந்து நண்பர்களாக பழகிய இருவரும் திருமணம் செய்துக்கொண்ட பின்னர், திருமண வாழ்க்கையில் நாயகன் அசோக் செல்வனுக்கு தன் மனைவியை மனைவியாய் நினைத்து பழக இயலாமல் தோழியாகவே நினைத்து பழகிவருகிறார். இவரின் சிறுவயது காதலியான வாணி போஜன் தீடிரென இவருடன் அறிமுகமாகிறார். மனைவியை தோழியாய் நினைத்து விலகி இருக்கும் இவர், சிறு வயது காதலியான வாணி போஜனிடம் நெருங்கி பழக விருப்புகிறார். பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை? விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன? எவ்வாறு இவர் ரித்திகாவின் காதலை புரிந்துக்கொள்வார் என்பதே படத்தின் கதை?
Read More

ஓ மை கடவுளே நடிகர்கள் & படக்குழுவினர்

ஓ மை கடவுளே அணியின் தகவல்

இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து
ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா
தொகுப்பாளர் பூபதி செல்வராஜ்
இசை லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பாளர் டில்லி பாபு, அசோக் செல்வன்
உற்பத்தி Century Max John Mary Productions LLP, Panorama Studios
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் Zee5
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஓ மை கடவுளே விமர்சகர்களின் விமர்சனம்

மாலைமலர்
மொத்தத்தில் ‘ஓ மை கடவுளே’ காதல் கலாட்டா.
தினமலர்
ஓ மை கடவுளே - கடவுள் காப்பாற்றுவார்
சினி உலகம்
அசோக் செல்வனின் மெச்சுரிட்டியான நடிப்பு.
சமயம் சினிமா விமர்சனம்
நல்ல வேளை கடவுள் என்கிற பெயரில் விஜய் சேதுபதி லெக்சர் அடிக்காமல் அம்சமாக நடித்தது ஆறுதல்.
பிலிமிபீட்
தோழியை காதலித்து திருமணம் செய்யும் ஹீரோவுக்கு வெறுக்கிறது வாழ்க்கை

ஓ மை கடவுளே ட்ரெய்லர்

Video Thumbnail

ஓ மை கடவுளே செய்திகள்

ஓ மை கடவுளே திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

ஓ மை கடவுளே

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+