twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கை தொடர்ந்து.. இந்திக்குப் போகிறது, 'ஓ மை கடவுளே..' அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!

    By
    |

    சென்னை: தமிழில், ஹிட்டான 'ஓ மை கடவுளே' படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.

    அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவான படம், ஓ மை கடவுளே. இதில் ஹிட்டானது.

    அடேங்கப்பா.. பால்கோவா சிலை போல சும்மா பதற வைக்கிறாரே டெமி ரோஸ்.. வேற லெவல் ஹாட்னஸ்! அடேங்கப்பா.. பால்கோவா சிலை போல சும்மா பதற வைக்கிறாரே டெமி ரோஸ்.. வேற லெவல் ஹாட்னஸ்!

    வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா உட்பட இதில் நடித்திருந்தனர். இதில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருந்தார்.

    ரமேஷ் திலக்

    ரமேஷ் திலக்

    அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தப் படத்தை அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹைபிகசர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்தனர். கடவுளாக நடித்த விஜய் சேதுபதிக்கு உதவியாளராக ரமேஷ் திலக் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

    சிறப்பான இயக்கம்

    சிறப்பான இயக்கம்

    இந்த ரொமான்டிக் காமெடி படம், விமர்சன ரீதியாகவும் கமர்சியலாகவும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தை பிரபலங்களும் பாராட்டினர். நடிகர் மகேஷ்பாபு, ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன் என்றும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட கதை, சிறப்பான இயக்கம் என்றும் அவர் கூறியிருந்தார்.

    விஸ்வக் சென்

    விஸ்வக் சென்


    இதையடுத்து இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. விஸ்வக் சென் ஹீரோவாக நடிக்கிறார். தருண் பாஸ்கர் வசனம் எழுதுகிறார். தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதன் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இப்போது இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

    என்டமோல் ஷைன்

    என்டமோல் ஷைன்

    இந்தப் படத்தின் என்டமோல் ஷைன் இண்டியா நிறுவனமும் மும்பை டாக்கீஸும் இணைந்து இந்தப் படத்தின் இந்தி உரிமையை பெற்றுள்ளன. அஸ்வத் மாரிமுத்து இந்தியிலும் இதை இயக்குகிறார். 102 நாட் அவுட் என்ற படத்தை இயக்கிய உமேஷ் சுக்லா, இதன் வசனத்தை எழுதுகிறார்.

    நெருக்கமான படம்

    நெருக்கமான படம்

    யார், யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுபற்றி அஸ்வத் மாரிமுத்து கூறும்போது, இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இப்போது தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறேன். அடுத்து இந்தி ரீமேக்கை இயக்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Tamil film 'Oh My Kadavule' is set to get a Hindi adaptation which will be written and creatively produced by “102 Not Out” director Umesh Shukla, the makers announced on Tuesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X