X
ராயன்

ராயன்

Action | 27 Jul 2024 | A | 145 Mins
Tamil

2.8 /5 Users

3.5 /5 Filmibeat

ராயன் கதை

ராயன் - தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தனுஷ் தானே இயக்குனராகவும், கதாநாயகனாக பணியாற்றியுள்ள அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ' சன் பிக்சர்ஸ் ' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'ராயன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க, இவருடன் இணைந்து பிரகாஷ் ராஜ், காளிதாஸ், சுந்தீப் கிஷான், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி சரத்குமார், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராயன் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் ராயன் திரைப்படத்தின் புகைப்படங்கள் 100 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள 'ராயன்' திரைப்படம் 2024 ஜூலை 26ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தானே தயாரித்து இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார். ராயன் - நடிகர் தனுஷ் திரைவாழ்வில் இவர் நடிக்கும் ' 50 'வது திரைப்படமாகும். ராயன் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் ராயன் திரைப்படத்தின் கதை சிறு வயதில் பெற்றோரை இழந்த தனுஷ் (ராயன்) தனது இரண்டு தம்பிகள் (காளிதாஸ் ஜெயராம் & சுதீப் கிஷான்) மற்றும் தங்கை துஷார விஜயன் ஆகியோரை வளர்த்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார். சென்னையில் வாழும் தனுஷின் குடும்பம் ஒரு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிறது. தன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தேடி தனுஷ் பழிவாங்கும் படலாம் தான், ராயன். ராயன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு ' துள்ளுவதோ இளமை ' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர், தனுஷ். ஆடுகளம், காதல் கொண்டேன், பொல்லாதவன், அசுரன் என பல வெற்றி படங்களில் நடித்து பல விருதுகளை அள்ளி குவித்துள்ளார். தனுஷ் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 50வது திரைப்படமாகும், ராயன். பா பாண்டி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர், தனுஷ். தமிழ் சினிமாவில் நடிகனாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர், இயக்குனர் என பல துறைகளில் தனது பங்களிப்பை கொடுத்து பணியாற்றி வருகிறார். தமிழ் சினிமாவில் இவருக்கென பல கோடி ரசிகர்கள் உள்ளனர். 2024 ஆம் ஆண்டு தனுஷின் ராயன் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகிறது. சமீப காலமாக தமிழ் சினிமா படங்கள் எதுவும் வெற்றி பெறாத நிலையில், ராயன் படத்தின் மீது பலர் நம்பிக்கை வைத்துள்ளனர்.  ராயன் திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர், தமிழக தணிக்கை குழு. இப்படத்திற்கு முன் நடிகர் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ' வடசென்னை ' திரைப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்று வெளியானது. தற்போது வடசென்னை பட பாணியில் அதிரடியை மையமாக கொண்டு இப்படம் உருவாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அம்பிகாபதி (2013), மரியான் (2013), கலாட்டா கல்யாணம் (2021) ஆகிய படங்களுக்கு பின் தனுஷ் - ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி அமைந்துள்ளது.
Read More

ராயன் நடிகர்கள் & படக்குழுவினர்

ராயன் அணியின் தகவல்

இயக்குனர் தனுஷ்
கதை தனுஷ்
சங்கதி தனுஷ்
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ராயன் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
சிறு வயதில் பெற்றோரை இழந்த தனுஷ் (ராயன்) தனது இரண்டு தம்பிகள் (காளிதாஸ் ஜெயராம் & சுதீப் கிஷான்) மற்றும் தங்கை துஷார விஜயன் ஆகியோரை வளர்த்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார். சென்னையில் வாழும் தனுஷின் குடும்பம் ஒரு பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிறது. தன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தேடி தனுஷ் பழிவாங்கும் படலாம் தான், ராயன்.

ராயன் ட்ரெய்லர்

Video Thumbnail

ராயன் பாடல்கள்

ராயன் செய்திகள்

ராயன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.8 /5 Your Rating

ராயன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+