Robo Shankar: தனுஷ்க்கு கடைசியாக குடும்பத்துடன் ரோபோ சங்கர் செய்த நன்றிக்கடன்.. எமோஷனலான நிகழ்வு
சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே இதயத்தை கனக்க வைக்கும் ரோபோ சங்கரின் மறைவுச் செய்திகள்தான். அவரது பழைய காமெடிகள் அனைத்தும் இணையவாசிகளால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ரோபோ சங்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது, தனுஷின் மாரி படம் தான்.
இப்படி இருக்கையில் தனுஷ்க்கு அவர் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்கு சினிமா வாய்ப்பு மட்டும் காரணமல்ல. மிக முக்கியமான இன்னொரு காரணமும் உள்ளது. இந்நிலையில் தனுஷ்க்கு தனது நன்றிக் கடனைச் செலுத்த ரோபோ சங்கர் குடும்பத்துடன் செய்த நிகழ்வு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மாரி படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமான சனிக்கிழமை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் தான் ரோபோ சங்கரால் படம் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும் என்ற எண்ணத்தை திரையுலகிற்கு கொடுத்தது. இதன் விளைவாகத்தான் விஸ்வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் ரோபோ சங்கர் கலக்கி இருப்பார். சினிமாவுக்கு வந்துதான் தனது திறமையை நிரூபிக்க வேண்டியது இல்லை என்றாலும், சினிமா ஆசை அவருக்குள் இருந்தால் அவரை வெள்ளித்திரையும் சரியாக பயன்படுத்திக் கொண்டது.

கடைசி நேரத்தில்: இவருக்கு உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில் கொரோனா காலகட்டமும் கூட. அப்படி இருக்கையில் தனது மருத்துவச் செலவுக்கு யாரிடம் உதவி கேட்பது என்று நினைத்துக் கொண்டு இருக்கையில், தனுஷிடன் உதவி கேட்க முடிவெடுத்தார் ரோபோ. ஆனால் அவரிடம் தனுஷ் எண் இல்லை. இப்படி இருக்கும்போது எப்படியோ தனுஷ் நம்பரை வாங்கி, தனுஷ்க்கு போன் செய்து இதுதான் நிலைமை என்று சொல்லி உள்ளார். உடனே தனுஷும், ' ரோபோ நான் விமானத்தில் இருக்கிறேன், இப்போது இப்படி சொல்றீங்களே என்று கூறிவிட்டு, இருங்க நான் செய்கிறேன்" என்று உறுதியும் அளித்துள்ளார்.
தனுஷ் செய்த உதவி: தனுஷ் இவ்வாறு சொல்லிவிட்டு போனை வைத்த அடுத்த 10வது நிமிடத்திற்குள் தான் எதிர்பார்த்த தொகையை விட அதிக பணம் அனுப்பி உதவி செய்தார். அவர் மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு நான் இல்லை என்று ஒரு பேட்டியில் கூறி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு தனுஷின் 50 வது படமான ராயன் படம் வெளியானது. அந்த படத்தை தனுஷ் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியும் இருந்தார்.

நன்றிக் கடன்: இப்படி இருக்கையில் இந்த படத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று படம் பார்க்க வேண்டும் என அவர் தனது குடும்பத்தினரிடம் சொல்லி, அவர்களை படத்திற்கும் அழைத்துச் செல்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கர் நன்றி உள்ளவர். அதனால்தான் அவர் தனுஷின் ராயன் படத்திற்கு குடும்பத்தையே அழைத்துச் செல்ல பேசியுள்ளார் என்று பதிவிட்டார்கள். ரோபோ மறைந்த செய்தி கேட்டதும் நடிகர் தனுஷ் நேற்று இரவே, ரோபோவின் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினருக்கு நான் இருக்கிறேன் என்று உறுதியும் அளித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களுமே கூட இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











