சூரரைப் போற்று கதை
சூரரைப் போற்று , தமிழ் திரைத்துறையில் ஒரு பெண் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவில் முன்னணி இயக்குனராக புகழ் பெற்றுள்ள திருமதி. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் " ஏர் டெக்கான் " நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் சுயசரிதை திரைப்படம். இந்தியாவில் புகழ் பெற்ற பிரபல தொழிலதிபரின் வாழ்க்கையை ஒரு சுவாரஸ்ய திரைக்கதையாக வடிவமைத்து உருவாக்கி உள்ள இப்படத்திற்கு, நடிகர் சூர்யா தனது 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சூரரைப் போற்று படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வெளியாகவிருந்த இப்படம், தியேட்டர் பணிநிறுத்தம் காரணத்தால் அமேசான் ஆன்லைன் ப்ரைம் வீடியோ என்ற ஓடிடி தளத்தில் 2020 நவம்பர் 12ல் வெளியானது. சூரரைப் போற்று படத்தில் பணியாற்றியிருக்கும் படக்குழு பற்றிய தகவல்கள் சூரரைப் போற்று படத்தின் புகைப்படங்களுக்கு சூரரைப் போற்று படத்தின் வீடியோக்கள் சூரரைப் போற்று திரைப்படத்தின் கதை சூர்யா (நெடுமாறன் ராஞ்சாங்கம்) ஒரு ஆசிரியரின் மகன். இவரின் தந்தை சட்ட ரீதியாக தனது கிராமத்தில் வாழும் மக்களுக்காக பல நன்மைகளை செய்து வருகிறார். ஆனால் சில முயற்சிகளில் தந்தையின் அஹிம்சை வழி எடுபடாததால் வன்முறையை கையில் எடுக்கிறார் சூர்யா. இதனால் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. சூர்யா (நெடுமாறன் ராஞ்சாங்கம்) இந்திய அரசின் முப்படைகளின் ஒன்றான ராணுவ விமான படையில் ஒரு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். பின் பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ராணுவ விமானத்தை ஓட்டும் ஒரு பைலட் அதிகாரியாக பதவி உயர்கிறார். தனது தந்தை உடல்நல குறைவு காரணமாக தனது வாழ்வின் இறுதி பயணத்தில் உள்ளதை அறியும் சூர்யா, விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் விமானத்தில் போதிய பணம் இல்லாததால் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். சூர்யா சொந்த ஊருக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. தனது மகனை தன் இறுதி நேரத்தில் கூட பார்க்க முடியாமல் சூர்யாவின் தந்தை உயிரிழக்கிறார். இந்த நிகழ்வு சூர்யாவின் மனதில் ஒரு முக்கிய நினைவாக மாறுகிறது. பணக்கார மக்களுக்கு மட்டும் தான் இந்த விமான சேவை என்னும் வழக்கத்தை மாற்றி அமைக்க சூர்யா போராடுகிறார். "டெக்கான் ஏர்லைன்ஸ்" என்னும் ஒரு விமான நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்க பல முயற்சிகள் செய்து போராடி வருகிறார். இறுதியில் பல முயற்சிகளுக்கு பின்னர் இவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்கிறது. அதன் அடிப்படையில் தனது சொந்த வீடு, நிலம் என அனைத்தையும் முதலீடு செய்து ஒரு விமான நிறுவனத்தை உருவாகிறார். ஆனால் சில பணக்கார நிறுவனத்தின் உரிமையாளர்களின் வியாபார தந்திரத்தால் தனது நிறுவனம், வீடு, சொத்து என அனைத்தையும் இழக்கிறார். சூர்யா மீண்டும் சில தந்திரங்களால் விமான நிறுவனம் தொடங்க முயற்சி செய்கிறார். தனது எதிரிகளுக்கு தெரியாமல் ரகசியமாக விமான நிறுவனம் தொடங்க திட்டமிடும் சூர்யா, அதனை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார். மீண்டும் சில சதி வலையில் சிக்கும் சூர்யா, பின்னர் மக்களுடன் நேரடியாக வானொலி, தொலைக்காட்சி என பல வழிகளில் விளம்பரங்கள் செய்து மக்களின் கவனத்தை பெறுகிறார். இறுதியில் சூர்யாவின் கனவு எவ்வாறு நடந்தது என்பதே இப்படத்தின் சுவாரஸ்யமான அழகான திரைக்கதை. சூரரைப் போற்று படத்தின் படக்குழு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பிரபல இந்திய தொழிலதிபரின் சுயசரிதை படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நாயகியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து இப்படத்தில் விவேக் பிரசன்ன, காளி வெங்கட், கருணாஸ், ஜாக்கி ஸ்ரொப் என பிரபல முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். எதார்த்தமான காட்சிகள் கொண்டுள்ள ஒரு திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா எடிட்டிங் செய்துள்ளார். சுதா கொங்கரா திரைக்கதையில் சுவாரஸ்ய படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தமிழ் திரைப்பட பிரபல நடிகர்/இயக்குனரான " உறியடி " புகழ் விஜய் குமார் சூரரைப் போற்று படத்திற்கு அழுத்தமான வசனங்கள் எழுதியுள்ளார். "ஏர் டெக்கான்" அதிபர் ஜி.ஆர். கோபிநாத் இந்தியாவில் பிரபலமான ஒரு விமான நிறுவனமான "ஏர் டெக்கான்" என்னும் நிறுவனத்தின் அதிபர்தான் ஜி.ஆர். கோபிநாத், இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி, பின்னர் அரசியல்வாதியாகவும் திகழ்பவர். இவர் இந்தியாவில் ஏழை முதல் செல்வேந்தர் வரை அணைத்து தரப்பு மக்களும் விமான பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் விமான பயணத்தை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூரரைப் போற்று படத்தின் பிரத்யேக தகவல்கள் சூரரைப் போற்று திரைப்படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா முன்னதாக தமிழில் வெளிவந்து வெற்றிபெற்ற இறுதிச்சுற்று என்னும் சுயசரிதை திரைப்படத்தினை இயக்கியுள்ளார். சூரரைப் போற்று திரைப்படத்தின் வாயிலாக சூர்யாவின் கஜினி படத்திற்கு பிறகு இதில் ஸ்டைலான தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 நவம்பர் 10ல் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். சூரரைப் போற்று படத்தின் விளம்பர மூலோபாயமான (ப்ரோமோஷன்) ஒரு பகுதியாக, தயாரிப்பு நிறுவனம் "ஸ்பைஸ்ஜெட்" நிறுவனத்துடன் தங்கள் விருப்பங்களை அதிகாரப்பூர்வ அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரான "அஜய் சிங்" தனது நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை 2020 பிப்ரவரி 13 ஆம் தேதியில் சூரரைப் போற்று படத்தின் போஸ்டரை ஒரு முத்திரையாக விமானத்தில் அச்சடிக்கப்பட்டு விமானங்கள் செயல்பட்டன. அதே நாளில் படத்தின் இரண்டாவது சிங்கிள் "ஸ்பைஸ்ஜெட்" நிறுவனத்தின் போயிங் 737 விமானங்கள் வானில் பறக்கும் நேரத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் சூரரைப் போற்று படக்குழு சில ஏழை குழந்தைகளை தேர்ந்தேடுத்து அவர்களை இலவசமாக படத்தின் தயாரிப்பாளர்/நாயகனான சூர்யா சொந்த செலவில் அவர்களை விமானத்தில் ஏற்றி சென்றுள்ளார். "ஏர் ஏசியா" விமான நிறுவனம் 2016 இல் கபாலி படத்திற்காகவும், 2020 ஆம் ஆண்டில் தர்பார் படத்திற்காகவும் அந்த படத்தின் போஸ்ட்டரை விமானத்தில் அச்சடித்து விளம்பரம் செய்ததை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் தயாரிப்பு/நடிப்பில் உருவாகும் சூரரைப் போற்று திரைப்படம் விமானத்தில் விளம்பரம் செய்துள்ள மூன்றாவது படமாகும். சூரரைப் போற்று படத்தின் பட்ஜெட் சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்புக்கான பட்ஜெட் மற்றும் படத்தில் பணியாற்றியிருக்கும் மொத்த படக்குழுவின் சம்பளம் என 20 கோடியும், நடிகர் சூர்யாவின் சம்பளம் 25 கோடியுமாக இப்படத்திற்கு 45 கோடிகள் செலவாகியுள்ளது. இப்படத்தினை அமேசான் ஓடிடியில் வெளியிட 45 முதல் 50 கோடிகள் வாங்கியுள்ள படக்குழு, பின்னர் இப்படத்தின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை சன் தொலைக்காட்சியிடம் 15 கோடிகளில் விற்றுள்ளது. இது தவிர ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மற்றும் ஹிந்தியில் ரீமேக் ரைட்ஸ் என இரண்டையும் 20 கோடிகளில் வழங்கியுள்ள படக்குழு, மொத்தம் 80 கோடிகளில் இப்படத்தினை வியாபாரம் செய்துள்ளது.
Read More