X
யானை

யானை

Action | 01 Jul 2022 | U/A | 156 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

யானை கதை

யானை இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதிரடி- திரில்லர் - குடும்பத் திரைப்படம். இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், புகழ், கங்கை அமரன் என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். யானை படத்தினை தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தனது 'ட்ரும்ஸ்டிக் புரோடுக்ஷன்' மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் நாயகன் அருண் விஜய் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 33வது ( எ.வி.33 ) படமாகும். குடும்பம் மற்றும் அதிரடி திரில்லர் படமாக உருவாகியுள்ள யானை படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆண்டோனி எடிட்டிங் செய்துள்ளார்.  யானை திரைப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு ' யு/எ ' சான்றிதழ் அளித்துள்ளது, இப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022 ஜூலை 01ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. யானை படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் யானை படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல் என அணைத்த வீடியோக்கள் யானை படத்தின் புகைப்படங்கள்   யானை திரைப்படத்தின் கதை  ராமநாதபுரத்தில் உள்ள பி.ஆர்.வி குடும்பத்துக்கும் ராமேஷ்வரத்தில் உள்ள சமுத்திரம் குடும்பத்துக்கும் இடையே பெரும் பகை உள்ளது. பி.ஆர்.வி குடும்பத்தின் கடைசி மகனான ரவிச்சந்திரன் (அருண் விஜய்) சமுத்திரம் குடும்பத்தின் வாரிசான லிங்கத்திடம் (கேஜிஎஃப் ராமசந்திரா ராஜு) இருந்து எப்படி தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார்.  மாற்றான் தாய் பிரச்சனை காரணமாக அண்ணன் சமுத்திரகனியே எப்படி அருண் விஜய்யை வீட்டை விட்டுத் துரத்த தனது குடும்பத்திற்கு உண்மையை புரிய வைத்தாரா? வில்லனை எப்படி வீழ்த்தினார் என்பது தான் யானை படத்தின் பலமான கதை. யானை படத்தின் பிரத்யேக தகவல்கள் யானை திரைப்படம் நடிகர் அருண் விஜய்யின் 33 வது படமாகும். இப்படத்தின் இயக்குனர் ஹரி-க்கு இப்படம் 16வது திரைப்படம். பட்ஜெட் பிரச்சனையால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க மிகவும் தாமதாக இருந்து வந்த நிலையில், பின்னர் ட்ரும்ஸ்டிக் புரோடுக்ஷன் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் ஹரி-யின் முந்திய படங்களை போன்று யானை படமும் குடும்பம் மற்றும் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியை மையமாக கொண்டு திரைக்கதை வடிவமைத்துள்ளார், இயக்குனர் ஹரி. இயக்குனர் ஹரியின் முந்திய படமான சாமி 2 மற்றும் சிங்கம் 3 படங்கள் எதிர்பார்த்த அளவில் சரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில், யானை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் வெற்றியின் மூலம் இயக்குனர் ஹரி தன்னை தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு முன்னணி இயக்குனராக நிருபிக்கும் முயற்சியில் உள்ளார். நடிகர் அருண் விஜய்யின் படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், யானை படத்தின் வெற்றியை கொண்டு வெளியாகும் புதிய படங்களுக்கு விநியோகம் அமையும் என இப்படத்தின் மேல் அதிக நம்பிக்கையில் உள்ளார், அருண் விஜய். யானை படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
Read More

யானை நடிகர்கள் & படக்குழுவினர்

யானை அணியின் தகவல்

இயக்குனர் ஹரி
கதை ஹரி
சங்கதி ஹரி
ஒளிப்பதிவாளர் கே. எ. சக்திவேல்
தொகுப்பாளர் ஆண்டனி
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

யானை விமர்சகர்களின் விமர்சனம்

சினிஉலகம்
மொத்தத்தில், கமெர்ஷியல் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாக அமைத்துள்ளது 'யானை'
புதிய தலைமுறை - விமர்சனம்
ஹரி தன்னை அப்டேட் செய்து கொள்ளாவிட்டால் கஷ்டம் தாம்லே.
இந்து தமிழ்
குடும்ப கவுரவம் என்பது சாதி ஆதிக்க வெறியாகி, பெற்ற பிள்ளைகளையே கொல்லத் துடிப்பதை கடுமையாக சாடி, பிளிறுகிறது இந்த ‘யானை’.
தினமலர் - சினிமா
யானை - பலத்துடன்...
பில்மிபீட்
மொத்தத்தில் கமர்ஷியல் ரசிகர்களுக்கு இந்த யானை கண்டிப்பாக பிடிக்கும்.

யானை ட்ரெய்லர்

Video Thumbnail

யானை பாடல்கள்

யானை செய்திகள்

யானை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

யானை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+