TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
சிங்கப்பூரில் 'மன்மதன் அம்பு'-நிருபர்களுக்கு லைவ்!
சிங்கப்பூரில் நடைபெறும் மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை செய்தியாளர்களுக்காக சென்னை ஹோட்டலில் லைவ் ஆக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளனராம். அதே போல படத்தின் நாயகனான கமல்ஹாசன் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் செய்தியாளர்களிடம் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உருவாகியுள்ள படம் மன்மதன் அம்பு.
கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ல இப்படம் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் கமல்ஹாசன் படமாகும்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசனே எழுதியுள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். படம் முழுக்க ரோம், வெனிஸ், பாரீஸ், பார்சிலோனாவில் வைத்துப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகளை மெடிட்டரேனியன் க்ரூய்ஸ் எனப்படும் பிரமாண்ட சொகுசுக் கப்பலில் படமாக்கியுள்ளனர்.
படத்தின் இசையை தேவி ஸ்ரீபிரசாத் கவனித்துள்ளார். மொத்தம் 6 பாடல்கள். அதில் 2 பாடல்களை கமல்ஹாசனே பாடியுள்ளார். இப்பாடல்கள் நவம்பர் 20ம் தேதி ரசிகர்களின் காதுகளை வந்தடையவுள்ளது.
இதற்காக சிங்கப்பூரில் பிரமாண்டமான அளவில் இசை வெளியீட்டு விழாவை வைத்துள்ளனர். அதில் கமல்ஹாசன், திரிஷா, மாதவன், சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் மொத்தமாக பங்கேற்கின்றனர்.
இந்த இசை வெளியீட்டு கோலாகலம் நவம்பர் 18ம் தேதியே, அதாவது இன்றே தொடங்கியுள்ளது. இன்று ஒட்டுமொத்த படக்குழுவினரும் சூப்பர்ஸ்டார் விர்கோ என்ற சொகுசுக் கப்பலில் பயணிக்கின்றனர். நாளை பிரேசில் நடனக் கலைஞர்கள், சீன அக்ரோபாட் கலைஞர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மன்மதன் அம்பு படக் குழுவினருடன் 300 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு ரசிக்கவுள்ளனர்.
நவம்பர் 20ம் தேதி சிங்கப்பூர் எக்ஸ்போ, மாக்ஸ் பெவிலியன் அரங்கில் இசை வெளியீடு நடைபெறுகிறது. 3 மணி நேரம் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை 7000 பேர் கண்டு களிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன், தேவிஸ்ரீபிரசாத், மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மிஸ் பண்ணி விடக் கூடாது என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கிண்டி, லீ ராயல் மெரீடியன் ஹோட்டலி்ல நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேதி மாலை 3.30 மணி முதல் இதைக் காணலாம். செய்தியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடு இது.
ஆடியோ வெளியீட்டைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கவுள்ளார்.