»   »  24: ஏ.ஆர்.ரகுமானின் காலம் என் காதலி 'ஸ்லோ பாய்ஸன்' பாராட்டும் ரசிகர்கள்

24: ஏ.ஆர்.ரகுமானின் காலம் என் காதலி 'ஸ்லோ பாய்ஸன்' பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 24 படத்தின் காலம் என் காதலி ஒற்றைப் பாடலை தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியிருக்கும் 'காலம் என் காதலி'யை பின்னணிப்பாடகர் பென்னி தயாள் பாடியிருக்கிறார்.

தள்ளிப்போகாதே பாடலைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ரகுமான் வெளியிட்டிருக்கும் 2 வது ஒற்றைப் பாடல் காலம் என் காதலி. இப்பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்கள் எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.

24

24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 24. டைம் டிராவல் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஒற்றைப் பாடலொன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

காலம் என் காதலியோ

காலம் என் காதலியோ என்று தொடங்கும் இப்பாடலில்

மாயமில்லை மந்திரமில்லை ஜாலமில்லை தந்திரமில்லை

காலம் என் காதலியோ கற்கால மோகினியோ

சுற்றி வந்தேன் விண்வெளியிலே வெற்றியெல்லாம் எந்தன் விரல் நுனியிலே" என்று வார்த்தைகளில் புகுந்து விளையாடியிருக்கிறார் வைரமுத்து.

பென்னி தயாள் + ஏ.ஆர்.ரகுமான்

ரகுமானின் இசைக்கு பென்னி தயாளின் துள்ளலான குரல் பெரும் வலிமை கொடுத்திருக்கிறது. டைம் டிராவல் பற்றிய கதையென்பதால் பாடலின் ஒவ்வொரு வரியுமே காலத்துடன் தொடர்புடையதாக உள்ளது.

அனிருத்

இப்பாடல் தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனால் #kalamenkadhali மற்றும் #24themovie போன்ற ஹெஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டடித்து வருகின்றன.

ரகுமான்

" ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் எப்பவுமே பெர்பெக்ட் " என்று இப்பாடலைக் கேட்டு பாராட்டியிருக்கிறார் தயா.

ஸ்லோ பாய்ஸன்

காலம் என் காதலி 'ஸ்லோ பாய்ஸன்' என்று பாராட்டியிருக்கிறார் எடிட்டர் மார்க்.


மொத்தத்தில் ஏ.ஆர்.ரகுமானின் 'காலம் என் காதலி' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.

English summary
24: A.R.Rahman's Kaalam En Kadhali Single Track Just before Released. Now this song Trending in All Social Networks.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil