»   »  அனிருத் வழியில் களமிறங்கும் 'வில் அம்பு' ஹரிஷ் கல்யாண்

அனிருத் வழியில் களமிறங்கும் 'வில் அம்பு' ஹரிஷ் கல்யாண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிருத் போன்று இசை ஆல்பம் வெளியிடும் முயற்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் இறங்கியிருக்கிறார்.

‘பொறியாளன்' ‘வில்அம்பு' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் ‘ஐ எம் சிங்கிள்' என்ற மியூசிக் ஆல்பத்தை உருவாகியுள்ளார்.

அவரே எழுதி பாடியுள்ள இந்த பாடலுக்கு எல்.வி.முத்துகுமார் இசையமைத்துள்ளார். இவர் மறைந்த பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் மகன் ஆவார்.

Actor Harish Kalyan Release Music Album

மேலும் சிலம்பரசனின் சித்தி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணை நினைத்து பாடும் ஒரு இளைஞனின் காதல்வரிகள் தான் பாடலின் கரு.

‘ஐ எம் சிங்கிள்... ஐ எம் ரெடி டு மிங்கிள்... தினமும் உன்னெ நெனெச்சேன... என்று பாடலின் ஆரம்ப வரிகளை எழுதியிருக்கும் ஹரிஷ் கல்யாண் இந்த ஆல்பம் குறித்து '‘7-வயதிலிருந்து நானும் மியூசிக் கத்துகிட்டேன்.

Actor Harish Kalyan Release Music Album

யுவன் போன்ற பல பிரபல இசையமைப்பாளரின் குருவான சதா மாஸ்டரிம்தான் நானும் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அந்த இசை ஆர்வத்தில்தான் இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளேன்.

இதை நண்பர் எல்.வி.முத்துகுமார் இசையமைத்து கொடுத்துள்ளார். வருகிற 29-ம் தேதி எனது பிறந்த நாளில் ‘யூ டியூபில்' வெளியிட திட்டமிட்டுள்ளேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Vil Ambu Fame Actor Harish Kalyan Release Music Album on his Birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil