Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர் சந்தானம் நடிப்பில் ரிலீசாகும் சபாபதி படம்... 2வது பாடல் வெளியீடு!
சென்னை : நடிகர் சந்தானத்தின் நடிப்பில் இம்மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர்
புனித்
ராஜ்குமார்
பெயரில்
மரக்கன்று
நட்டு
மரியாதை
செலுத்திய
பிரபல
நடிகர்...
வைரலாகும்
போட்டோ!

நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம் காமெடியனான களமிறங்கி சிறப்பான பல கேரக்டர்களை நாயகர்களுக்கு இணையாக நடித்தார். தொடர்ந்து இவரது கால்ஷீட்டுக்காக ஹீரோக்களும் இயக்குநர்களும் காத்திருந்த காலமும் உண்டு. இந்நிலையில் ரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து தற்போது நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
அவருக்கு ஹீரோ அவதாரமும் சிறப்பாகவே கைக்கொடுத்து வருகிறது. தானும் சில படங்களை தயாரித்து வருகிறார். மற்றவர்கள் தயாரிப்பிலும் நடித்து வருகிறார். கொரோனாவால் ரிலீஸ் பாதிக்கப்பட்ட அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
Recommended Video

சபாபதி படம்
சமீபத்தில் அவரது நடிப்பில் டிக்கிலோனா படம் ரிலீசானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ரசிகர்களால் பாராட்டப்பட்டு சிறப்பான படமாக அமைந்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் சபாபதி படம் ரிலீசாக உள்ளது. வரும் 19ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது பாடல் வெளியீடு
இந்தப் படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவதாக பெண்ணே பெண்ணே பாடல் தற்போது அதேபோல லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. திங்க் மியூசிக் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநிவாச ராவ் இயக்கம்
படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாச ராவ். படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரீத்தி வர்மா நடித்துள்ளார். ஆர்கே எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ், ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளுசபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தந்தை -மகன் உறவு
இந்தப் படத்தில் சந்தானம் பக்கத்து வீட்டு பையன் லுக்கில் இருக்கிறார். படத்தில் அவர் திக்குவாயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். அவரது தந்தையாக எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். தந்தை -மகன் உறவை சிறப்பான வகையில் இந்தப் படம் கூறுவதாக அமைந்துள்ளது.

சாம் சிஎஸ் இசை
படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பான வகையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியாகியுள்ள இரு பாடல்களும் மெலடி வகையாக அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள பாடலை பாடகர் பிரதீப் குமார் பாடியுள்ளார்.