Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
யோசிக்கவே இல்லை உடனே ஒகே சொல்லிட்டேன்… ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிதா சம்பத் பேச்சு !
சென்னை : சிவி குமார் படம்னு சொன்னதும் யோசிக்கவே இல்லை உடனே ஒகே சொல்லிட்டேன் என்று அனிதா சம்பத் கூறியுள்ளார்.
Recommended Video
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான அனிதா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் கானுடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். கடந்த வாரம் இவர்கள் இருவரும் கண்களை கட்டிக்கொண்டு ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அனிதா தனது கண்கனை தானம் செய்வதாக அறிவித்திருந்தார்.
பிக்
பாஸ்
ஜோடியில்
அனிதா
செய்த
தரமான
சம்பவம்…
வியந்து
பாராட்டிய
நடுவர்கள்
!

ஜாங்கோ
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் ஜாங்கோ. இந்தியாவின் முதல் டைம் லூப் வகை திரைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படும் இந்தப் படத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகரன், அனிதா சம்பந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (செப். 06) சென்னையில் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் பேசியதாவது.

யோசிக்காம ஒகே சொன்னேன்
அதில், ஒரு படத்தில் நடிக்க நான் மிகவும் யோசிப்பேன், ஒரு சிறு கதாபாத்திரமா இருந்தாலும் அது நல்லதா இருக்கனும்னு நினைப்பேன். ஆனால், இது சிவி குமார் படம்னு சொன்னதும் யோசிக்கவே இல்லை உடனே ஒகே சொல்லிட்டேன். ஏன்னா அந்த படம் கண்டிப்பா நல்லா தான் இருக்கும். நிறைய வெற்றிப்படங்களை சிவி குமார் கொடுத்து இருக்கிறார். அதே போல அனைவருக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து இருக்காரு என்றார்.

ஜிப்ரான் இசை படத்திற்கு
மேலும்,பேசிய அவர் இயக்குனர் மனோ கார்த்தி அவர்கள் இந்த படத்திற்காக மிகவும் கடினமாக ஊழைந்து இருப்பதாக கூறினார். இந்த படத்தில் ஜிப்ரான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார். நான் ஜிப்ரான் அவர்களின் தீவிர ரசிகை என்றார். மேலும், உங்களுடைய இசை இரவு நேர தாலாட்டு என்று கூறிய அனிதா, இந்த படத்தில் ஜிப்ரான் அவர்களின் இசை படத்தை மேலும் அழகு சேர்க்கும் என்றார்.
ஏழை நாடு
முன்னதாக பேசிய இயக்குனர் வேலு பிரபாகரன் இந்த நாடு ஏழைகளின் நாடு. ஒரு நடிகர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஒரு நடிகர் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். 100 நாட்கள் நடித்து விட்டு 100 கோடி ரூபாய் வாங்குவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில்,சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்டோர் பேசினார்கள்.