»   »  ‘எனக்கென யாரும் இல்லையே’... எமியுடன் உருகி ஆடும் அனிருத்!

‘எனக்கென யாரும் இல்லையே’... எமியுடன் உருகி ஆடும் அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆக்கோ படத்தின் பாடல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் அனிருத்துடன் நடிகை எமி ஜாக்சன் நடனமாட இருக்கிறார்.

புதுமுக இயக்குனர் ஷ்யாம் குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆக்கோ'. ஆர்வக்கோளாறு என்பதன் சுருக்கம் தான் இந்த ஆக்கோ. அர்ஜூனன், துலிகா குப்தா என முழுக்க புதுமுகங்களே நடிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத்.

இப்படத்தின் விளம்பரங்கள் அனைத்திலும் அனிருத் முன்னிலைப் படுத்தப் பட்டு வருகிறார்.

எனக்கென யாரும் இல்லையே...

எனக்கென யாரும் இல்லையே...

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் ‘எனக்கென யாரும் இல்லையே' என்ற பாடல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனிருத் டான்ஸ்...

அனிருத் டான்ஸ்...

இந்தப் பாடலை அனிருத் பாடி, இசையமைத்துள்ளார். எனவே, இப்பாடலில் அனிருத்தையே நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

அதன்படி, இந்த மியூசிக் வீடியோ அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் படக்குழு அமெரிக்கா செல்ல இருக்கிறது.

எமி...

எமி...

இதில் கூடுதல் விஷேசம் என்னவென்றால், இந்தப் பாடலில் அனிருத்துடன் நடிகை எமி ஜாக்சன் நடனமாட இருக்கிறார் என்பது தான்.

புரோமோ பாடல்...

புரோமோ பாடல்...

ஆக்கோ படத்தின் புரோமோ பாடலாக உள்ள இப்பாடல் படத்தின் இறுதியில் ஒளிபரப்பாகும் என இப்படத்தின் இயக்குநர் ஷ்யாம் குமார் தெரிவித்துள்ளார்.

English summary
The single ‘Enakkena Yaarum Illaye’ from upcoming film Aakko is already popular among music lovers. Cashing in on that, the makers have decided to shoot it as an elaborate video; one that will feature composer Anirudh and actress Amy Jackson.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil