»   »  இங்கிலாந்து நகரங்களில் தமிழ் இசைக்கச்சேரி நடத்தவிருக்கும் இசையமைப்பாளர்!

இங்கிலாந்து நகரங்களில் தமிழ் இசைக்கச்சேரி நடத்தவிருக்கும் இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்!

சென்னை : இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களைப் போலவே இசையமைப்பாளர் அனிருத், அவ்வப்போது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். தற்போது, முதன்முறையாக லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

வரும் ஜூன் 16-ம் தேதி லண்டனில் உள்ள வெம்ப்ளி அரெனா என்னும் இடத்திலும், அதற்கு அடுத்த நாள் 17-ம் தேதி பாரீஸ் நகரில் ஜெனித் என்னும் இடத்திலும் இசைக் கச்சேரி நடைபெற இருக்கிறது. இதுவரை அங்கு எந்த தமிழ் இசைக்கலைஞரின் இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது இல்லை.

Anirudh to do tamil music concert in london

இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களை மட்டுமே பாட இருக்கிறாராம் அனிருத். இந்த கான்செர்ட்டுக்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

Anirudh to do tamil music concert in london

பல ஆண்டுகளாக துறையில் இருக்கும் இளையராஜா, ரஹ்மான் ஆகியோர் கூட இசைக்கச்சேரி நடத்தாத இடங்களில் அனிருத் கச்சேரி நடத்தவிருப்பது அனிருத் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. சமீபத்தில் ஹங்கேரி நாட்டில் இசைக் கச்சேரி நடத்தி பாராட்டுப் பெற்றார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Like Ilayaraja and AR Rahman, Anirudh performs overseas music concerts occasionally. He will be performing live concert at London and Paris for the first time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X