»   »  அஜீத் ரசிகர்கள் கொண்டாடிய பாட்டு அனிருத்துக்கு சுத்தமாக பிடிக்காதாம்!

அஜீத் ரசிகர்கள் கொண்டாடிய பாட்டு அனிருத்துக்கு சுத்தமாக பிடிக்காதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தில் அனிருத்துக்கு சுத்தமாக பிடிக்காத பாடல் தான் ஹிட்டாகியது.

ஐஸ்வர்யா தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் அனிருத். முதல் படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகப் பிரபலமானார்.

யார் இந்த பையன் என்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பாட்டு

பாட்டு

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேதாளம் படத்தில் வந்த ஆளுமா டோலுமா பாடல் செம ஹிட்டானது.

ஆளுமா டோலுமா

ஆளுமா டோலுமா

ஊருக்கே பிடித்த ஆளுமா டோலுமா பாடல் அனிருத்துக்கு பிடிக்கவில்லையாம். அவர் தான் இசையமைத்துக் கொடுத்தார் என்றாலும் அவருக்கு டியூனில் திருப்தி ஏற்படவில்லை.

வேண்டாம்

வேண்டாம்

ஆளுமா டோலுமா பாடலை படமாக்கிய அன்று அனிருத் சிவாவுக்கு போன் செய்து பேசியுள்ளார். ஆளுமா டோலுமா பாடல் வேண்டாம், இது நம்ம ரேஞ்சுக்கு இல்லை என்று சிவாவிடம் தெரிவித்துள்ளார் அனிருத்.

ஹிட்

ஹிட்

சிவாவோ அனிருத்திடம் சொல்லாமலேயே பாடலை படமாக்கியுள்ளார். ஷூட்டிங் முடிந்த பிறகு அனிருத்துக்கு போன் செய்து அஜீத் உள்பட அனைவரும் பாடல் அருமை என்று பாராட்டியதாக சிவா தெரிவித்திருக்கிறார். அப்படி இருந்தும் அனிருத்துக்கு பாடல் பிடிக்கவில்லை. தனக்கு பிடிக்காத பாடல் சூப்பர் ஹிட்டானது அனிருத்துக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

English summary
Aaluma doluma song from Ajith starrer Vedhalam was a hit but the movie's music director Anirudh Ravichander somehow doesn't like it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X