»   »  'தல'யை அடுத்து தலைவர் பட வாய்ப்பும் கிடைக்குமா?: எதிர்பார்ப்பில் அனிருத்

'தல'யை அடுத்து தலைவர் பட வாய்ப்பும் கிடைக்குமா?: எதிர்பார்ப்பில் அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் படத்திற்கு இசையமைக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ள அனிருத்துக்கு ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கும் ஆசை வந்துள்ளது.

சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தல 56 என்று தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். முதலில் அனிருத் பெயர் அடிபட்டது. அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அனிருத் தான் தல 56 படத்தின் இசையமைப்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இது குறித்து அனிருத் கூறுகையில்,

தல 56

தல 56

தல 56 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. சிறப்பான இசையை அளிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

அஜீத் ரசிகன்

அஜீத் ரசிகன்

நான் அஜீத் சாரின் ரசிகன் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். நான் அஜீத் படத்திற்கு இசையமைக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

விக்ரம்

விக்ரம்

கடந்த ஆண்டு விஜய் படத்திற்கு இசையமைத்தேன். இந்த ஆண்டு அஜீத் மற்றும் விக்ரம் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு திடீர் என்று கிடைத்தது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டு பிரகாசமாக உள்ளது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அனைத்து இசையமைப்பாளருக்குமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு இசையமைக்கும் ஆசை இருக்கும். எனக்கு அந்த ஆசை உள்ளது. ரஜினி சார் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் என் கனவு நிறைவேறிவிடும் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.

English summary
Anirudh is excited to compose music for Thala 56. The young musician dreams to bag Rajinikanth's movie also.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil