»   »  'அவளோ இங்கு இல்லை, நானோ அங்கு இல்லை'... மீண்டும் வசீகரித்த அனிருத்

'அவளோ இங்கு இல்லை, நானோ அங்கு இல்லை'... மீண்டும் வசீகரித்த அனிருத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த 'அவளுக்கென' ஒற்றைப் பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார்.

வெளியான சிலமணி நேரங்களிலேயே பெருவாரியான ரசிகர்களை சென்று சேர்ந்திருக்கிறது அவளுக்கென. 6 வது முறையாக அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் இந்தப் பாடல் வெளியாகி இருக்கிறது.

'கடல் தாண்டிப் போகும் காதலி போல' அவளுக்கென ரசிகர்களை வசீகரித்ததா? பார்க்கலாம்.

கடல் தாண்டிப் போகும்

கடல் தாண்டிப் போகும்

கடந்த வருடம் அனிருத் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான 'கடல் தாண்டிப் போகும்' காதலி சமூக வலைதளங்கள், இணையம், மியூசிக் சேனல் என்று வைரல் ஹிட்டடித்தது. அதே போல அதன் 2 வது பாகமாக வெளியாகி இருக்கும் அவளுக்கென பாடல் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்று பார்க்கலாம்.

அவளுக்கென

"அவளுக்கென புதிதாய் பிறந்தோம்..அவளுக்கென கவிதை உளறினோம்.. அவளுக்கென கடல்கள் தாண்டினோம்" என்று பாடலின் ஆரம்ப வரிகளே வசீகரிக்கிறது. மேலும் காதலர்களின் பிரிவை வெளிப்படுத்தும் வகையில் "அவளோ இங்கு இல்லை, நானோ அங்கு இல்லை' உள்ளிட்ட வரிகள் வழக்கம் போல விக்னேஷ் சிவன் ஸ்பெஷல். நானும் ரவுடிதான் படத்தில் அசத்திய ராகுல் தாத்தா மற்றும் ஒரு இளம் காதல் ஜோடிகளின் கலவையாக இந்தப் பாடலின் வீடியோவை மிக்ஸ் செய்து அனிருத் வெளியிட்டிருக்கிறார். காதல் காட்சிகளில் இளம் ஜோடிகளை விட ராகுல் தாத்தாவின் காட்சிகளே அதிகம் கவர்ந்து விடுகின்றன.

மலேசியாவில்

மலேசியாவில்

இந்த காதலர் தினத்தை மலேசியாவில் உள்ள 15,௦௦௦ ரசிகர்களுடன் அனிருத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் அவளுக்கென ரசிகர்களை எந்தளவு கவர்ந்தது என்பதை பார்க்கலாம்.

இந்தப் பாடலை

"இந்தப் பாடலின் வழியாக காதல் எங்கும் பரவுகிறது. இதனைப் பார்த்த பின் எனது ஏஞ்சலை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன்" என்று பாடலைப் பாராட்டியிருக்கிறார் ஷங்கர்.

என்னவளை

"அனிருத் சகோதரா வாய்ப்பே இல்லை! இந்தப் பாடலை கேட்டபின்னர் நான் என்னவளை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். விக்னேஷ் சார் உங்களுக்கு மிகவும் நன்றிகள் " என்று அனிருத், விக்னேஷ் கூட்டணியை பாராட்டியிருக்கிறார் கார்த்தி.

English summary
Valentine's Day Special - Anirudh 'Avalukena' Single Track Released. Now Anirudh Fans Celebrate this song in All Social Media's.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil