»   »  சந்தோஷ் நாராயணனுடன் இணைந்த அனிருத்.. 'மனிதன்' உதயநிதிக்காக

சந்தோஷ் நாராயணனுடன் இணைந்த அனிருத்.. 'மனிதன்' உதயநிதிக்காக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் மனிதன் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் அனிருத்.

உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் மனிதன். இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ஜாலி எல்.எல்.பி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.


இதில் உதயநிதியுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஹன்சிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.


இந்நிலையில் உதயநிதிக்காக அனிருத் இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சமீபகாலமாக அனிருத் பாடிய பாடல்கள் பெரும் ஹிட்டடித்து வருகின்றன.இதனால் தனது மனிதனிற்கு பலம் சேர்க்க உதயநிதி, அனிருத்தை பாட வைத்திருக்கிறாராம். அனிருத்-சந்தோஷ் நாராயணன் இணைந்திருக்கும் படத்தை வெளியிட்டு நன்றி அனிருத் என்று உதயநிதி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.


என்றென்றும் புன்னகை புகழ் அஹமது இயக்கியிருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் உதயநிதி தயாரித்து வருகிறார்.


முன்னதாக தனுஷின் கொடி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை சந்தோஷ் நாராயணனிடம், அனிருத் இழந்தது குறிப்பிடத்தக்கது.


English summary
Udhayanidhi Stalin Tweeted "Thx anirudhofficial 4 being a part of manithan .. Uve made the song so special".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil