»   »  யூடியூபில் 1 கோடி பார்வைகளைத் தாண்டிய அஞ்சான் சாங்- ட்விட்டரில் கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

யூடியூபில் 1 கோடி பார்வைகளைத் தாண்டிய அஞ்சான் சாங்- ட்விட்டரில் கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஞ்சான் படம் வெளிவந்த புதிதில் ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற பாடலான ஏக் தோ தீன் சாங், தற்போது சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்திருக்கிறது.

படம் வெளியாகி மாபெரும் தோல்வியைத் தழுவியது ஊரறிந்த விஷயம் ஆனால் சூர்யாவின் குரலில் முதன்முதலில் வெளியாகிய இந்தப் பாடலை யூடியூபில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

தற்போது இதனை #10mviewsforsuriyasekdoteen என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி, ட்விட்டரில் வேறு கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

அஞ்சான்

அஞ்சான்

கமல், ரஜினி, அஜீத், விஜய் போன்ற நடிகர்களின் வரிசையில் சூர்யாவிற்கும் மும்பை டானாகும் ஆசை வந்தது, அந்த ஆசையின் விளைவாக அஞ்சான் படத்தில் ராஜு பாயாக நடித்தார்.

மாபெரும் தோல்வியைத் தழுவியது

மாபெரும் தோல்வியைத் தழுவியது

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் உருவான அஞ்சான் திரைப்படம், யாரும் எதிர்பாராதவிதமாக மாபெரும் தோல்வியைத் தழுவியது.

ஏக் தோ தீன்

ஏக் தோ தீன்

இந்நிலையில் தற்போது சூர்யா குரலில் வெளியான ஏக் தோ தீன் பாடலை இதுவரை சுமார் 1 கோடிக்கும் அதிகமான பேர் யூடியூபில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

முதலிடத்தில் வொய் திஸ் கொலைவெறி

முதலிடத்தில் வொய் திஸ் கொலைவெறி

தனுஷ் பாடிய வொய் திஸ் கொலைவெறி பாடலை இதுவரை சுமார் 1 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூபில் பார்த்து ரசித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை யூடியூபில் முதலிடத்தில் இருக்கிறது தனுஷின் வொய் திஸ் கொலைவெறி.

2 வது இடம் சூர்யாவிற்கு

தனுஷின் பாடலிற்கு அடுத்த இடத்தை சூர்யாவின் ஏக் தோ தீன் சாங் பிடித்திருக்கிறது, தற்போது இதனை #10mviewsforsuriyasekdoteen என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.

வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாரே பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்குன்னு அந்த மாதிரி படம் பிளாப் பாட்டு ஹிட்டு...

English summary
Anjaan Ek Do Teen Song Video, More Than 1 Crore Views in You Tube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil