»   »  சவுன்ட் அன்பௌன்ட்... ஏ ஆர் ரஹ்மானின் புதிய இசை நிகழ்ச்சி!

சவுன்ட் அன்பௌன்ட்... ஏ ஆர் ரஹ்மானின் புதிய இசை நிகழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுண்ட் அன்பௌன்ட் என்ற பெயரில் சென்னையில் புதிய இசை நிகழ்ச்சியை ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானும் அவரது கேஎம் இசைக் கூடமும் இன்று நடத்துகிறார்கள்.

லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் இன்று மாலை 7 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக மூன்று வெவ்வேறு விதமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். உலக இசையை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்த பிரமாண்ட இசை திருவிழா நடைபெற உள்ளது. இதில் ரஹ்மானின் கேஎம் இசைக் கூட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

AR Rahman's free concert Sound Unbound

நிகழ்ச்சி நிரல் மொத்தம் மூன்று பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

முதலில் NAFS எனப்படும் 'அ - கபெள்ளா' குழுவினரின் நிகழ்வு. இக்குழுவினர் ஏற்கனவே 'Tauba Tauba' மற்றும் 'ghanan ghanan' என்ற காணொளி மூலமாக சமூக வலைதளங்களாகிய ட்விட்டர், யூடூப்பிலும் பெரும் பாராட்டை பெற்றவர்கள்.

இரண்டாவதாக 'ஹான்ட்ஸ் ஆப் பயர்' எனப்படும் 'ரஷ்யன் பியானோ', அதாவது பியானோ வாசிக்க பல முறைகள் இருந்தாலும், அவற்றில் 'ரஷ்யன் பியானோ' வகையை தேர்ந்தெடுத்து, அதில் மட்டும் முழு தேர்ச்சியை பெற்ற இளைஞர் குழுவால் வாசிக்கப்படும் ஓர் நிகழ்வு.

மூன்றாவதாக, 'Sempre Libera' என்கிற கே.எம். இசை கல்லூரியின் புத்தம் புதிய குழு. இக்குழுவினர், நமது கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய இசையும் ஒன்று சேர்த்து இசை நாடகத்தின் வழியாக வெளிப்படுத்த உள்ளனர்.

2008 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட கே.எம். இசை கூடம் உலகத்தர இசையை மாணவர்களுக்கு கற்பிக்கும் கல்லூரியாக திகழ்கிறது.

English summary
For the first time in Chennai, A.R. Rahman and KM Music Conservatory present three unique musical acts featuring some of our top students and alumni as never before seen in Chennai Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil