»   »  ரஜினியின் 2.0... அதகளம் பண்ண தயாராகும் ஏ ஆர் ரஹ்மான்!

ரஜினியின் 2.0... அதகளம் பண்ண தயாராகும் ஏ ஆர் ரஹ்மான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரூ 450 கோடியில் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் ரஜினியின் 2.0 படச் செய்திகளைவிட, ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் செய்திகள்தான் அதிகமாக இணைய தளங்களில் உலா வருகின்றன.

இனி, நிலைமை மாறும். காரணம் 2.0 படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டன. இனி இந்தியா மற்றும் சர்வதேச அளவில் புரமோஷன் பணிகள் தொடங்கவுள்ளனர்.

பின்னணி இசை

பின்னணி இசை

'2.0' படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை இந்த வாரத்தில் சென்னையில் தொடங்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தில் பின்னணி இசைக்குத்தான் முக்கியத்துவம் என்பதால், அதில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்க விரும்புகிறார் ரஹ்மான்.

டப்பிங் நிறைவு

டப்பிங் நிறைவு

ஏற்கெனவே படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுற்றன. ரஜினி தனது டப்பிங்கை 3 நாட்களில் முடித்துக் கொடுத்துவிட்டார்.

முழுமையான 3 டி படம்

முழுமையான 3 டி படம்

முழுக்க 3டி-யில் படப்பிடிப்பு செய்யப்பட்ட படம் இது. தற்போது முதற்கட்ட எடிட்டிங் பணிகளை முடித்துள்ளது படக்குழு. ஆன்டனிதான் படத்தின் எடிட்டர்.

இந்த வாரம்

இந்த வாரம்

இந்த வாரத்திலிருந்து அதற்கு பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கவிருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 2018-ல் வெளியாக உள்ளது.

English summary
AR Rahman is going to compose the background score for Rajinikanth's 2.0 from this week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil