யப்பா...செம அசத்துதே... அரண்மனை 3 பாடலை வைரலாக்கும் ரசிகர்கள்!

சென்னை : அரண்மனை 3 திரைப்படத்தின் முதல் பாடலான ரட்டபட்டா வெளியான இரண்டே நாளில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா ரசிகர்களின் வட்டாரம் விரிவடைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த படத்தில் முதன்முறையாக ஆர்யா பேயாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரண்மனை

அரண்மனை

நகைச்சுவைத் திரைப்படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி முதன்முறையாக த்ரில்லா பேய் திரைப்படங்களை இயக்குவதில் களமிறங்கினார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது.

அரண்மனை3

அரண்மனை3

அரண்மனை முதல் மற்றும் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய அளவில வெற்றிப்பெற்றன. இந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக நடித்த திரைப்படமாகும்.

படப்பிடிப்பு முடிந்த

படப்பிடிப்பு முடிந்த

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல இப்படத்திலும் சுந்தர் சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்காமல் இருந்தனர். தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரட்டபட்ட 1 மில்லியன் பார்வையாளர்கள்

ரட்டபட்ட 1 மில்லியன் பார்வையாளர்கள்

அரண்மனை 3 திரைப்படத்தில் இடம் பெற்ற ரட்டபட்டா பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அரண்மனைக்குள்ள யாரு என்று தொடங்கும் இந்த பாடலை கிருஷ்ணா ஜெயந்தி அன்று வெளியானது. வெளியான இரண்டே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அமைந்துள்ளனர். இந்த பாடலை எஞ்சாய் என்சாமி புகழ் அறிவு எழுதி அவரே பாடி உள்ளார்.

ஆர்யா பேயாக

ஆர்யா பேயாக

சாக்லேட் பாயாக நடித்து வந்த ஆர்யா முதன்முறையாக இப்படத்தில் பேயாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. சார்பட்டா பரம்பரையில் ஆர்யாக பாக்சராக கலக்கி இருந்தார்.

எனிமி

எனிமி

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் டீலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தில் ஆர்யா முரட்டு வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சமீப காலமாக ஆர்யா நல்ல கதைகளை தேர்வு செய்து ஆர்யா நடித்துவருதால் நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். அனைவரும் அரண்மனை 3 மற்றும் எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X