»   »  அஜீத் பட பாடல்கள், ட்ரைலர் வெளியானது... ரசிகர்கள் ஏக வரவேற்பு!

அஜீத் பட பாடல்கள், ட்ரைலர் வெளியானது... ரசிகர்கள் ஏக வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் பாடல்கள் நேற்று காலையும், ட்ரைலர் மாலையிலும் வெளியாகின.

இதனால் ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பாடல்களையும் ட்ரைலரையும் ரசித்தனர் அஜீத் ரசிகர்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ஆரம்பம் படத்தின் பாடல்கள் நேற்று காலையிலேயே வெளியாகிவிட்டன.

அஜீத்தின் ஆரம்பம் ட்ரைலர்

ஐட்யூனில்

ஐட்யூனில்

பாடல்கள் முதலில் ஐட்யூன்ஸில் மட்டுமே வெளியாகின. இதனால் பணம் செலுத்தி பாடல்களை டவுன்லோட் செய்வதில் மும்முரம் காட்டினர் அஜீத் ரசிகர்கள். நேற்று மாலைதான் கடைகளுக்கு சிடி வந்தது.

5 பாடல்கள்

5 பாடல்கள்

படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் பா விஜய் எழுதியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் துள்ளல் இசையில் அமைந்துள்ளன.

அடடா ஆரம்பம்...

அடடா ஆரம்பம்...

அடடா ஆரம்பம் பாடல் எடுத்த எடுப்பிலேயே ஹிட்டாகிவிட்டது. மற்றொரு பாடல் ஸ்டைலிஷ் தமிழச்சியும் ஹிட்தான். மற்ற பாடல்களும் படம் வெளியாவதற்குள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகிவிடும் என இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

ட்ரைலர்

ட்ரைலர்

நேற்று இரவு படத்தின் ட்ரைலரை யு ட்யூபில் வெளியிட்டனர். வெளியான சிலமணி நேரங்களில் 3 லட்சம் விசிட்களை நெருங்கிவிட்டது இந்த ட்ரைலர்.

டபுள் மகிழ்ச்சி

டபுள் மகிழ்ச்சி

இந்த ஆரம்பம் படம் குறித்து ஆரம்பத்தில் எந்த செய்தியுமே தெரியாமல் திண்டாடினர் அஜீத் ரசிகர்கள். படத்தின் தலைப்பே ஒரு ஆண்டு கழித்துதான் வெளியானது. ஆனால் நேற்று ஒரே நாளில் பாடல்களும் ட்ரைலரும் அடுத்தடுத்து வெளியானதில் இரட்டிப்பு சந்தோஷத்துக்குள்ளாகிவிட்டனர் அஜீத் ரசிகர்கள்.

English summary
Ajith's Arrambam songs and trailer released on September 19th and fans of the star celebrate the same.
Please Wait while comments are loading...