அடித்து நொறுக்கும் ‘எனிமி’ 2 வது பாடல்.... கேட்டு ஆட்டம்போடும் ரசிகர்கள் !
சென்னை : எனிமி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான டும் டும் பாடல் வெளியாகி அனைவரையும் ஆட்டம் போடவைத்துள்ளது.
இப்படத்தில் விஷால்,ஆர்யா, மம்தா மோகன்தாஸ், மிருணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார், ஆர்.டிராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

எனிமி
இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் எனிமி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா , மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்

ஆர்யா வில்லன்
இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் சென்னையில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் விஷால் ஆர்யா இந்த படத்தில் ஆர்யா எதிரியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் எனிமி படத்தில் இணைந்துள்ளனர். ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். கடந்த ஆண்டு நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு ஜூலையில் முழுமையாக முடிவடைந்தது. தற்போது படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன.

வைரலாகும் 2வது பாடல்
இதையடுத்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான 'எனிமி' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான 'டம் டம்' இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சார்பட்டா பரம்பரை
பா ரஞ்சித இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்யா பாக்ஸிங் வீரராக நடித்திருந்தார். இதற்காக மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை படத்தில் கனகட்சிதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

அரண்மனை3யில் பேயாக
அரண்மனை 3 திரைப்படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில், விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இத்திரைப்படம், அக்டோபர் மாதம் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆர்யா பேயாக நடித்துள்ளார்.

சூப்பரான தலைப்பு
அதேபோல, நடிகர் விஷால், நடித்து முடித்துள்ள விஷாலின் 31 படத்தை து.ப சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி சென்னையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள்.வீரமே வாகை சூடும் என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஷால்32 படத்திற்கு பூஜை
விஷால் நடிப்பில் உருவாகும் 32வது படத்திற்கான பூஜை அவரின் பிறந்த நாள் அன்று போடப்பட்டது. இதில், அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கவுள்ளார். முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக சுனைனா நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











