Don't Miss!
- News
டெல்லியின் "டேஷர்".. யார் இந்த ஸ்வேதா செராவத்? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்!
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பார்டர் படத்தோட ரொமாண்டிக் பாடல்... நாளைக்கு வெளியாக இருக்கு
சென்னை : குற்றம் 23 படத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் -இயக்குநர் அறிவழகன் மீண்டும் இணைந்துள்ள படம் பார்டர்.
படம் அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க
பாக்ஸ்
ஆபிஸில்
மாஸ்டர்
வசூலை
அடித்து
நொறுக்கிய
சிவகார்த்திகேயனின்
டாக்டர்!
இந்நிலையில் நாளைய தினம் படத்தின் பாடல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் 23 படம்
குற்றம் 23 படத்தில் அருண் விஜய் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2017ல் நடித்து வெளிவந்த படம். த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப் படம் அருண் விஜய் மற்றும் அறிவழகன் இருவருக்கும் சிறப்பாக அமைந்தது.

பார்டர் படம்
மருத்துவத் துறையில் நடைபெறும் குற்றங்களை காட்சிப் படுத்துவதில் அறிவழகன் சிறப்பான வெற்றியை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த டீம் மீண்டும் இணைந்து தற்போது பார்டர் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெயிலருக்கு வரவேற்பு
முன்னதாக படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ரொமாண்டிக் பாடல் ரிலீஸ்
நெஞ்சே நெஞ்சே என துவங்கும் அந்தப் பாடலை பாடகர்கள் கார்த்திக் மற்றும் ஜோனிதா ஆகியோர் பாடியுள்ளனர். ரொமாண்டிக் வீடியோ பாடலாக அது வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் தெரிவித்துள்ளார்.

19ம் தேதி ரிலீஸ்
படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெபி படேல் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். முன்னதாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் அடுத்த மாதம் 19ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய்
படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றியுள்ளார்.அருண் விஜய் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அவருக்கு வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன.

கைகொடுக்குமா பார்டர் படம்?
இந்நிலையில் குற்றம் 23 படத்தில் பட்டையை கிளப்பிய அருண் விஜய் மற்றும் அறிவழகன் டீம் மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவையும் சிறப்பாக அமைந்த நிலையில் இந்தப் படமும் அருண் விஜய்க்கு கைக்கொடுக்கும் என்று நம்பலாம்.