twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் தெரியாத நடிகைகள், செலவு வைக்கும் இசையமைப்பாளர்கள் - சேரன் தாக்கு

    By Shankar
    |

    Cheran
    இப்போதெல்லாம் மொழி தெரியாமல் இங்கு நடிக்க வரும் நடிகைகளை தமிழை கடைசி வரை கற்றுக் கொள்வதே இல்லை என்றும், வெளிநாட்டுக்கு கம்போசிங் போகிறோம் என்ற பெயரில் இசையமைப்பாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாகவும் சாடினார் இயக்குநர் சேரன்.

    தெலுங்கில் பூமிகா தயாரித்த படத்தை 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்துக்கு தேவா குடும்ப வாரிசான போபோ சசி இசையமைத்திருந்தார். எனவே தேவா மற்றும் அவரது சகோதரர்கள் சபேஷ் முரளி உள்பட குடும்பத்தினர் வந்திருந்தனர்.

    இதில் பங்கேற்ற சேரன் பேசுகையில், "தமிழ் படங்களில் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள நடிகைகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி, டாப்சி போன்றறோர் முன்னணி நடிகைகளாக உள்ளனர். மேலும் பல புதுமுக நடிகைகளும் நடிக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது. இந்த நடிகைகள் தமிழ் கற்க வேண்டும். துள்ளி எழுந்தது காதல் படத்தின் நாயகி ஹரிப்பிரியா இங்கு பேசும்போது, 'அடுத்த முறை விழாவுக்கு வரும் போது நிச்சயம் தமிழ் பேசு வேன்' என்றார். இதே மாதிரிதான் 'முரண்' பட விழாவிலும் சொன்னார்.

    ஆனால் தமிழ் கற்றுக்கொள்ளவே இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் பலர் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் கற்றுக் கொள்வது இல்லை. தமிழ்நாட்டு மருமகள் ஆகி விட்ட பிறகு தமிழ் கற்கிறார்கள். இனி வெளி மாநில நடிகைகள் ஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

    இசையமைப்பாளர்கள் இப்போதெல்லாம் வெளி நாட்டுக்கு பாடல்கள் கம்போசிங் போவதையும் ஒரு மாதம் ரீ ரீக்கார்டிங் செய்வதையும் பெருமையாக பேசுகின்றனர். இதில் என்ன பெருமை இருக்கிறது... தயாரிப்பாளர்களுக்கு அப்படி செலவு வைக்கக் கூடாது! என்னுடைய பாரதி கண்ணம்மா தொடங்கி பல படங்களில் பின்னணி இசைக்கு அதிகபட்சம் 7 நாட்கள்தான்," என்றார்.

    English summary
    Director Cheran slammed new non - Tamilan heroines for not learning Tamil language properly. He also criticised music composers for taking too much time for re recording.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X