»   »  "முதல் படமே ரிலீஸ் ஆகல.. ஆனா.." - இசையமைப்பாளர் டி.இமான் உருக்கமான பேச்சு!

"முதல் படமே ரிலீஸ் ஆகல.. ஆனா.." - இசையமைப்பாளர் டி.இமான் உருக்கமான பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜெயம் ரவி நடித்திருக்கும் 'டிக் டிக் டிக்' திரைப்படம் தான் இசை அமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ள 100-வது படம்.

100 படங்களுக்கு இசை அமைத்திருப்பது குறித்து டி.இமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் தமிழ் சினிமாவில் இசையமைத்த முதல் திரைப்படமே வெளிவரவில்லை எனத் தெரிவித்தார் இமான்.

100 சீரியல்களுக்கு மேல் இசை

100 சீரியல்களுக்கு மேல் இசை

"பல மாஸ்டர்களிடம் நான் முறையாக இசை கற்றேன். கீபோர்ட் பிளேயராக வாழ்க்கையைத் தொடங்கினேன். 200-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தேன். 'கிருஷ்ணதாஸி' தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி 100 தொடர்களுக்கு மேல் இசை அமைத்தேன்.

முதல் படமே வெளிவரவில்லை

முதல் படமே வெளிவரவில்லை

2002-ம் ஆண்டு 'காதலே' சுவாசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அந்தப் படம் வெளிவரவில்லை. 'தமிழ்' எனது முதல் படமாக அமைந்தது. இப்போது 'டிக் டிக் டிக்' எனது இசையில் வெளியாகியிருக்கும் 100-வது படம்.

125 பாடகர்கள் அறிமுகம்

125 பாடகர்கள் அறிமுகம்

எனது இந்த இசைப் பயணத்தில் 125 பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதைப் பெருமையாக நினைக்கிறேன். சின்ன படம், பெரிய படம், நல்ல படம், கெட்ட படம் என்ற பாகுபாடு இல்லாமல் பணியாற்றி இருக்கிறேன்.

பாடுவதற்கு சம்பளம் வாங்கியதில்லை

பாடுவதற்கு சம்பளம் வாங்கியதில்லை

லைப் ஆர்க்கெஸ்ட்ராவையே பயன்படுத்தி வருகிறேன். எனக்கு கீழ் 100 பேர் வேலை செய்கிறார்கள். யாருக்கும் ஒரு ரூபாய் கூட சம்பள பாக்கி வைத்ததில்லை. நான் பாடுவதற்கு யாரிடமும் சம்பளம் வாங்கியதில்லை.

காலத்தை வென்ற பாடல்கள்

காலத்தை வென்ற பாடல்கள்

இன்று 100 படங்கள், நாளை ஆயிரம் படங்கள் என்ற பேராசை கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் லேப் டாப்பில், போனில் இமானுக்கென்று தனி ஃபோல்டர் உருவாக்க வேண்டும். அதில் காலத்தை வென்ற எனது 100 பாடல்கள் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை" என நெகிழ்ச்சியோடு பேசினார்.

English summary
'Tik Tik Tik' is the 100th film composed by music director D Imman. D.Imman speaks in press meet, "In 2002, I was introduced to Cinema with the film 'Kadhale swasam', which was not released. 'Thamizh' is my first film and now the 100th movie in my music is 'Tik tik tik'. I am honored to have introduced 125 singers to my music career.", said Imman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil