»   »  யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் நேரடியாக இயக்கிய 'திரி' இயக்குநர் - வீடியோ

யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் நேரடியாக இயக்கிய 'திரி' இயக்குநர் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காதவர் படம் இயக்கினால் எப்படி இருக்கும்? சிறப்பாகவே இருக்கும். எந்த ஒரு தொழிலை நேசிக்கிற யாராலும் அதை சிறப்பாகச் செய்ய முடியும் என திரி ப்டத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் நடிகர் ஜெய பிரகாஷ் கூறினார்.

அறிமுக இயக்குநர் அசோக் இயக்கிய திரி படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த திரைப்படத்தில் அஸ்வின், ஸ்வாதி நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன் மிரட்டல் வில்லனாகவும் ஜெயப்பிரகாஷ் பாசமான அப்பாவாகவும் அவருக்கு ஜோடியாக அனுபமாவும் நடித்துள்ளனர்.


Debut director Ashok Amirtharaj's Thiri audio launched

இந்தப் படத்தை இயக்கியுள்ள அசோக் அமிர்தராஜ் யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்கவில்லை. இருந்தாலும் ஒரு அறிமுக இயக்குநர் போல் இல்லாமல் படத்தை அழகாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்துள்ளார் என நடிகர் ஜெயபிரகாஷ் கூறினார்.


அப்பா மகன் உறவை குறித்த படம். நாம் வாழ்க்கையில் ஜெயிக்கும்போது, நம்மை பெற்றவர்கள் நம்முடன் இல்லை என்றால் என்ன ஆகும்? என்பதுதான் கதை. வரும் செப்டம்பரில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சூப்பர் சிங் புகழ் அஜீஸ் இப்படத்தின் இசையமைப்பாளர். வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுத்கியுள்ளார்.

English summary
Thiri a new tamil movie audio launched recently. Super singer fame Ajees worked as music director in this film and debut director Ashok amirthjaraj directed this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil