»   »  அன்பார்ந்த தனுஷ் ரசிகர்களே... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "மாரி".....!

அன்பார்ந்த தனுஷ் ரசிகர்களே... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "மாரி".....!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி படத்தின் இசை வெளியீடு மே 25ம் தேதி என்றும் படத்தின் டீசர் நாளை முதல் (மே 2௦) என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் காஜல் அகர்வால் இவர்களுடன் ரோபோ சங்கர் நடிக்கும் இப்படத்தில் தனுஷ் டைலராக வருகிறார். வேலை இல்லாத இளைஞன் போன்று நிறைய படங்களில் நடித்து விட்டதால் இதில் சற்று வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால் இதில் நூல் விற்பவராக வருகிறார். காஜலின் கடைக்கு செல்லும் தனுஷிற்கு காஜல் மேல் காதல் வருகிறது. அதைச் சுற்றிய கதைக் களமே "மாரி" படமாம்.


இசை வழக்கம் போல அனிருத் தான். இதில் வருகின்ற பாடல் வரிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்து இருக்கிறார் தனுஷ்.


Dhanush Maari Audio Release Date Confirmed…

"மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா... மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா"


"மாரி... கொஞ்சம் நல்ல மாறி...ரொம்ப வேற மாறி மாரி... தேச்சா தங்கம் மாறி...மொறச்சா சிங்கம் மாறி"...


இப்படி அமைந்துள்ளன அந்த வரிகள்.


English summary
Dhanush’s Maari First Look Teaser was releasing on 20th May. Before getting ready to celebrate this surprise news by Dhanush fans, one more interesting and wonderful news for Dhanush fans was Maari music album all set to release on 25th May.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil