»   »  போற்றி போற்றி தலைவா... எம்.ஜி.ஆர் சாதனைகளை பாடலாக எழுதி வெளியிடும் இயக்குநர் பேரரசு!

போற்றி போற்றி தலைவா... எம்.ஜி.ஆர் சாதனைகளை பாடலாக எழுதி வெளியிடும் இயக்குநர் பேரரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமரர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் சாதனைகளை ஒரு பாடலாகவே எழுதி வெளியிட்டுள்ளார் இயக்குநர் பேரரசு.

எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டு ஆகியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ் திரையுலம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் பேரரசு, எம்.ஜி.ஆர் சாதனைகள், மக்களிடத்தில் அவர் எப்படி இருந்தார். திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணிகள் உள்ளிட்ட பல அம்சங்களை ஒரு பாடலாக தொகுத்து அதை வீடியோ வடிவில் உருவாக்கி வெளியிட இருக்கிறார்.

Director Perarasu released audio video on MGR

இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறும்போது, "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. இவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் எழுதி அதை வீடியோவாக தயார் செய்திருக்கிறேன். இந்த வீடியோவை எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, எங்கள் இல்லத்திலேயே வெளியிடலாம் என்று கூறினார்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான இன்று, எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களின் இல்லம் அமைந்துள்ள ராமாவரம் தோட்டத்தில் வெளியிட இருக்கிறேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகளை பற்றிய வீடியோவை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்," என்றார்.

இயக்குநர் பேரரசு உருவாக்கியுள்ள வீடியோவிற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களில், சங்கரின் பேரன், ரசாந்த் இசையமைத்துள்ளார். லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார்.

Read more about: mgr, perarasu, பேரரசு
English summary
Director Perarasu has released a audio video on late MGR's achievement to celebrate MGR Centenary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil