»   »  ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'... பாடல்களை வெளியிடுகிறார் அக்ஷய் குமார்!

ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'... பாடல்களை வெளியிடுகிறார் அக்ஷய் குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் பாடல்களை இந்தி நடிகர் அக்ஷய்குமார் வெளியிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, விடிவி கணேஷ் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.

Enakku Innoru Peru Irukku Audio Launch Details

'டார்லிங்' புகழ் சாம் ஆண்டன் இயக்கி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' இசை வெளியீட்டு விழா வருகின்ற 12ம் தேதி நடைபெறுகிறது.

இப்பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்டு, பாடல்களை வெளியிடவுள்ளார்.

அக்ஷய்குமார் தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.ஓ' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். '2.ஓ' மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என 2 படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம் ஜி.வி.பிரகாஷின் அறிமுகப் படமான 'பென்சில்' வருகின்ற 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
G.V.Prakash's Enakku Innoru Peru Irukku Audio Launch Details now Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil