Don't Miss!
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- News
தேசிய ஜனநாயக முற்போக்கு பணிமனை.. புதிய பெயர் வைத்த எடப்பாடி.. அப்போ பாஜக? என்னங்க இது.. குழப்புதே!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கொண்டாட்டமான தீபாவளி ரிலீஸ்... தம்தம் பாடலை வெளியிட்ட எனிமி டீம்!
சென்னை : எனிமி திரைப்படம் இந்த தீபாவளி ரிலீசாக வரும் 4ம் தேதி ரிலீசாக உள்ளது.
விஷால், ஆர்யா இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
அண்ணன் வீடு திரும்பியதால் குஷியான சுஹானா கான்... கிளாமர் போட்டோவை ஷேர் செய்து கொண்டாட்டம்!
படத்தின் பிரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தம்தம் பாடல் தற்போது சிறிய அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

எனிமி படம்
நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து மிரட்டியுள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளி ரிலீசாக சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படத்துடன் மோதவுள்ளது. வரும் 4ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உளளது.

விஷாலின் எனிமி
விஷால் மற்றும் ஆர்யா முன்னதாக பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இரண்டாவது முறையாக எனிமி படத்தின்மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விஷாலுக்கு எனிமியாகியுள்ளார் ஆர்யா.

சமமான கேரக்டர்
வில்லனாக இருந்தாலும் படத்தில் ஆர்யாவிற்கு விஷாலுக்கு சமமான ரோல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் படத்தில் போட்டிப்போட்டு நடித்துள்ளது டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவற்றின்மூலம் தெரிகிறது. ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை வெற்றிக்கு பிறது இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ப்ரமோஷன் பணிகள்
படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர் வினோத்குமார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.
Recommended Video

பத்திரிகையாளர் சந்திப்பு
இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படம் குறித்த விமர்சனங்களை உடனடியாக கூற வேண்டாம் என்றும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்க்க விடுங்கள் என்றும் விமர்சகர்களிடம் விஷால் கேட்டு கொண்டார்.
|
தம்தம் பாடல் வெளியீடு
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் தம்தம் பாடலின் சிறிய பகுதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் விஷால் மற்றும் மிருணாளினி ரவி காணப்படுகின்றனர். திருமணக் கொண்டாட்டம் போல காட்சிகள் உள்ளன. படத்தில் மேலும் மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா போன்றவர்களும் நடித்துள்ளனர்.