twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்: கானா பாலாவின் ஸ்டெர்லைட் பாடல்

    By Siva
    |

    சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

    தூத்துக்குடியில் உள்ள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 100 நாட்கள் அமைதியாக போராட்டம் நடந்தது. 100வது நாள் போராட்டத்தின்போது போலீசார் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    Gana Balas song about Sterlite is impressive

    இதில் 17 வயது பள்ளி மாணவி, 19 வயது கல்லூரி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்களை சுட்டுக் கொல்ல போலீசாருக்கு அனுமதி அளித்தது யார் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார். "என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம் தூத்துக்குடி ஊருல ஸ்டெர்லைட் ஆலைய மூட சொல்லி நடத்துனாங்க போராட்டம்

    100 நாள் அங்க அமைதியாக நடந்தது ஆர்ப்பாட்டம் அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான் அப்பாவி மக்களை தான் சிட்டுக் குருவி போல் சுட்டுக் கொன்னுட்டான்' என்ற பாடல் கேட்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளது.

    English summary
    Gana Bala has sung a song about the killings in Tuticorin. Ennada Idhu Nyayam song by Gana Bala has impressed the people of Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X