twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா?

    |

    சியோல்: கங்னம் ஸ்டைல் பாடல் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அது கடந்துவந்த பாதையைப் பார்க்கலாம்.

    பொதுவாக ஒருவருக்கு பிறந்தநாள் அல்லது ஒரு நிறுவனம் துவங்கப்பட்ட நாள் என்றால் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுவே மக்கள் விரும்பிய, மக்களை ஆட்டம்போட வைத்த பாடலாக இருந்தால் கொண்டாடுவதில் ஒன்றும் தவறில்லையே...

    அதனால் யூடியூப் நிறுவனம் இப்பாடல் வெளியிடப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளது. ஆமாங்க... உலகத்தையே புது நடன பாணியில் ஆட்டம்போட வைத்த கங்னம் ஸ்டைல் பாட்டு ரிலீஸ் ஆகி நேற்றுடன் ஆறு ஆண்டுகள் கடந்து இன்று ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    காட்சியமைப்பு

    துள்ளலான இசை, துருதுரு நடனம், கண்ணைக் கவரும் காட்சியமைப்பு என ரிலீசான அன்றே இந்த பாடல் இணையத்தில் ஹிட் அடித்தது. கங்னம் என்பது, தென்கொரியாவின் சியோல் நகரத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் பெயர். அந்த மாவட்டத்திலுள்ள வாழ்க்கை முறைக்கு கங்னம் ஸ்டைல் என்று பெயர்.

    சை

    சை

    இந்த பாடலை இயற்றி இசையமைத்தவர் கங்னம் மாவட்டத்தில் பிறந்த தென்கொரிய பாடகர் சை. இவருடைய முழுப்பெயரான பார்க் ஜே சாங்-ஐ சுருக்கமாக சை என மாற்றிக்கொண்டார். இந்த பாடலின் வரிகள் உற்சாகமான மனநிலையோடு வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் இளம் ஆண் மற்றும் பெண்ணைப் பற்றியது.

    உதாரணத்திற்கு, "

    சூடாக இருக்கும்போதே காபியை சுவைப்பவன் இவன், பகலை விட இரவில் சூடாக இருப்பவள் அவள்"

    போன்ற வரிகள் இடம்பெற்றிருக்கும்.

    ஆரம்ப காலம்

    ஆரம்ப காலம்

    ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சை-க்கு பள்ளிக்கு செல்வதிலோ, கல்வி கற்பதிலோ ஆர்வம் இல்லையாம். எப்போதுமே வகுப்பில் அந்தரங்க ஜோக்குகளை சொல்லி சிரிக்க வைப்பாராம். அவன் அந்தரங்க ஜோக்குகள் சொல்வதில் மன்னன் என அவருடைய வகுப்பாசிரியையே சொல்லியிருக்கிறார்.

    இசை நிகழ்ச்சி

    இசை நிகழ்ச்சி

    அடல்ட் ஜோக் அடிப்பதில் கில்லாடியாக இருந்த சை ஒருநாள் பாப் இசை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது குயீன் என்ற பிரிட்டிஷ் ராக் இசைகுழுவின் "போகிமியன் ரேப்சோடி" என்ற பாடலை பார்த்தபோதுதான் பாடகர் ஆக வேண்டுமென்ற எண்ணம் வந்துள்ளது.

    சிறை

    சிறை

    ஆரம்ப காலங்களில் இவர் வெளியிட்ட பாடல்கள் கொரிய நாடுகளில், ஹிட் அடித்தாலும், பல விமர்சனங்களை சந்தித்தது. அவருடைய இரண்டாவது ஆல்பமான சா 2 பாடல், நாட்டுமக்களிடையே எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாகக் கூறி தென்கொரிய நீதிமன்றம் சைக்கு சிறை தண்டனை வழங்கியது. கட்டாய ராணுவப்பணி திட்டத்தின் கீழ் சை தென்கொரிய ராணுவத்திலும் பணியாற்றியுள்ளார்.

    போராட்டம்

    போராட்டம்

    பல போராட்டங்களைத் தாண்டி கங்னம் ஸ்டைல் பாடலை உலகத்திற்க்கு கொண்டு சேர்த்தார் சை. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி யூடியூப் வரலாற்றிலேயே ஒரு பில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட வீடியோவாக சாதனை படைத்தது. இன்று வரை யூட்யூபில் அதிகமாக பார்க்கப்படும் பட்டியலில் இருக்கும் இப்பாடல், அதிகமாக பார்க்கப்பட்ட பாடல் என கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளது.

    English summary
    South Korean pop singer Psy released his Gangnam Style song six years back. It breaks many records in youtube, received massive response from global audience. The song stands in top list in youtube viewership upto till date.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X