»   »  காது ரெடியா?... ரிலீஸாகப் போகுதாம் "இது நம்ம ஆளு" பாட்டு... சிம்பு பிறந்த நாளன்று!

காது ரெடியா?... ரிலீஸாகப் போகுதாம் "இது நம்ம ஆளு" பாட்டு... சிம்பு பிறந்த நாளன்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இது நம்ம ஆளு படத்தின் பாடல்கள் மற்றும் இசை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.

சிம்பு, நயன்தாரா, சூரி, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளில் படத்தின் பாடல்கள் மற்றும் இசையை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

நிஜத்தில் பிரிந்த சிம்பு, நயனை வைத்து இது நம்ம ஆளு படத்தை எந்த நேரத்தில் பாண்டிராஜ் ஆரம்பித்தாரோ தெரியவில்லை. குறுகிய காலத்தில் படத்தை முடிக்கும் இயக்குனர் என்ற பெயரை இந்தப்படம் மூலமாக இழந்து விட்டார். அவர் அடுத்து இயக்கிய பசங்க 2, கதகளி படங்கள் இந்தப் படத்திற்கு முன்னதாக வெளியாகி விட்டன.இதில் பசங்க 2 வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற, கதகளியும் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது.


ஒருவழியாக

ஒருவழியாக

இடையில் நடந்த சிலபல சண்டைகள், உரசல்கள், சச்சரவுகளுக்குப் பின் ஒருவழியாக இந்த படத்தின் இசை மற்றும் பாடல்கள் வெளியீட்டுத் தேதியை தயாரிப்புக் குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.


சிம்பு பிறந்தநாளில்

வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி நடிகர் சிம்பு தனது 33 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு இது நம்ம ஆளு படத்தின் இசை மற்றும் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.


தேனாண்டாள் பிலிம்ஸ்

தேனாண்டாள் பிலிம்ஸ்

இது நம்ம ஆளு படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ஒரு பெரிய தொகையை கொடுத்து இது நம்ம ஆளு படத்தை இந்நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறுகின்றனர்.


வெளியீட்டுத் தேதி

வெளியீட்டுத் தேதி

படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருந்தாலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியை இந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Simbu,Nayanthara Starrer Idhu Namma Aalu Audio will be Launched on February 3rd, for Simbu's Birthday Special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil