»   »  ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இளையராஜாவை மிஞ்ச முடியாது!- பேரரசு

ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இளையராஜாவை மிஞ்ச முடியாது!- பேரரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இளையராஜாவை மிஞ்ச முடியாது என்று இயக்குநர் பேரரசு கூறினார்.

ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறுகையில், "நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரைப் பார்த்துதான் பொறாமைபட்டுள்ளேன். ஒருத்தர் என்னுடைய முன்னாள் காதலியின் கணவன். மற்றொருவர் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள். அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு.

Ilaiyaraaja is incomparable, says Perarasu

நான் இசைஞானி இளையராஜா அவர்களைக் கவரும் வகையில் கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன். நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டி கூடப் பயணிக்கலாம்.இயக்குநர் பாணியின் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் மனதைக் கவரும் வகையில் உள்ளன. இப்படிப்பட்ட சிறந்த பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்களால் தான் உருவாக்க முடியும்.

எனக்கு இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை அவர் இதைப்போன்ற பாடல்களைத்தான் உருவாக்க வேண்டும். கரு பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசை ஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது என்பதுதான் உண்மை," என்றார்.

English summary
Director Perarasu hailed Maestro Ilaiyaraaja is an incomparable genius.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil