»   »  கோவையில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி.. நடத்துகிறார் கார்த்திக் ராஜா!

கோவையில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி.. நடத்துகிறார் கார்த்திக் ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரையைத் தொடர்ந்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கோவையிலும் நடத்துகிறார் அவர் மகன் கார்த்திக் ராஜா.

இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார்.

மதுரையில்...

மதுரையில்...

தனது அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடந்த ஆண்டு மதுரையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இளையராஜாவும் பங்கேற்றார். பல பாடல்களை அவர் பாடினார். மதுரை நகரமே ஸ்தம்பிக்கும் அளவு கூட்டம் கூடியது.

கோவையிலும்...

கோவையிலும்...

இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது கோயம்புத்தூரிலும் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை நடத்த கார்த்திக் ராஜா முடிவெடுத்துள்ளார். இதனை கார்த்திக் ராஜாவே அறிவித்திருக்கிறார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

அவர் கூறுகையில், "மதுரையில் கடந்த வருடம் நடந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நிறைய பேர் கோயமுத்தூரிலும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். தற்போது இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இந்த இசை நிகழ்ச்சியில் நல்ல திறமையான பாடகர்களை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது," என்றார்.

இசையமைப்பிலும்...

இசையமைப்பிலும்...

தற்போது கார்த்திக் ராஜா இசையில், ‘கடை எண் 6', ‘வாராயோ வெண்ணிலவே', ‘சகாப்தம்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் சகாப்தம் படம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karthik Raja is making arrangements to conduct a concert of Ilaiyaraaja in Coimbatore.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil