Don't Miss!
- News
மொட்டை மாடியில் ரொமான்ஸ்.. சட்டென வந்த காதலியின் தாய்.. பதறிப்போன மாணவன்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இளையராஜாவின் இசையில் மாயோனே பாடல் ... பாடலை வெளியிட்டது மாயோன் படக்குழு!
சென்னை : புதுமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாயோன்.
இந்த படத்தில் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ள நிலையில் படத்தின் டைட்டில் சாங் தற்போது வெளியாகியுள்ளது.
கணவர் மடியில் உட்கார்ந்து...பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி செய்த வேலையை பாருங்க

மாயோன் படம்
நடிகர் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மாயோன். இந்த படத்தை புதுமுக இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

டீசர் வெளியீடு
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது . திகில் அம்சங்கள் நிறைந்துள்ள இந்த டீசரின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னணி இசை மற்றும் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

சிறப்பான வரவேற்பு
இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் பார்வைகளை பெற்றது. இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அறிமுக இயக்குனர்
படத்தின் கேஎஸ் ரவிக்குமார் ராதாரவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனரின் படம் போல இல்லாமல் மிகவும் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

டைட்டில் பாடல் வெளியீடு
இந்நிலையில் தற்போது இளையராஜாவின் இசையில் படத்தின் டைட்டில் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மாயோனே என்று துவங்கும் அந்த பாடல் கர்நாடிக் இசை பாணியில் அமைந்துள்ளது.

தெய்வீக பாடல்
அந்தப் பாடல் மிகவும் தெய்வீகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது பாடலை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்கும் உணர்வை தவிர்க்க முடியவில்லை. பெருமாளின் புகழ்பாடும் வகையில் அந்த பாடல் அமைந்துள்ளது.

த்ரில்லர் படம்
ஒரு த்ரில்லர் படத்தில் இத்தகைய பாடலை எந்த இடத்தில் டைரக்டர் பயன்படுத்தியிருப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆயினும் சிபி சத்யராஜின் முந்தைய படங்கள் போல் இல்லாமல் இந்த படம் மிகவும் சிறப்பான வகையில் அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.