twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த டியூனுக்கு எப்படிய்யா பாட்டு எழுதுறன்னு கேட்ட வாலி...இளையராஜா சொன்ன சுவாரஸ்ய கதை!

    |

    சென்னை : இசைஞானி இளையராஜா ஓர் ஒப்பற்ற இசைமேதை, இசைத்துறையில் அவர் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

    இவருடைய இசையை பிரமித்து ரசித்து... ரசித்து...லாபித்து போனவர்களே அதிகம்...பலரின் இரவு நேர தாலாட்டும் இவரின் பாடலே....

    ஹாப்பி பர்த்டே அட்லி.. இன்னைக்காவது ஷாருக்கான் படத்தோட அப்டேட் வெளியாகுமா? ரசிகர்கள் வெயிட்டிங்!ஹாப்பி பர்த்டே அட்லி.. இன்னைக்காவது ஷாருக்கான் படத்தோட அப்டேட் வெளியாகுமா? ரசிகர்கள் வெயிட்டிங்!

    தற்போது வீடியோ மூலம் பேசிய இளையராஜா, பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் உருவான விதம் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

    மைக்கேல் மதன காமராஜன்

    மைக்கேல் மதன காமராஜன்

    1990ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார். இதில், கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில் கமல் 4 விதமான கெட்டப்பில் நடித்திருப்பார். நகைச்சுவைத்திரைப்படமான இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    Recommended Video

    திருக்குறளில் இருந்து உருவான 'பேர் வச்சாலும் வைக்காம' பாடல்.. இளையராஜாவின் சுவாரஸ்ய வீடியோ!
    ஹிட் பாடல்

    ஹிட் பாடல்

    இப்படத்தில் இடம் பெற்ற பாடல் தான் பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் இந்த பாடல் அப்போது மிகவும் பிரபலம். இதில்,கமல் 4விதமான கெட்டப்பில் மாறி மாறி நடித்திருப்பார்... இப்பாடலில் கமல் குஷ்பூவின் நடனமும், காட்சிக்கு காட்சி உடைமாற்றுவதும் ரசிக்கும் படி இருக்கும். பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    இப்படித்தான் பாடல் உருவாச்சு

    இந்த பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 31ஆண்டுகள் ஆன நிலையில், இந்த பாடல் எப்படி உருவானது என்ற ரகசியத்தை இசைஞானி இளையராஜா வீடியோ மூலம் கூறியுள்ளார். அதில், பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலுக்கு ஒரு சுவாரசியமான தகவல் இருக்கு என்று கூறினார். அந்த பாட்டுக்கு டியூன் போட்டுட்டு வாலிசாரிடம் இதுதான் டியூன் என்று சொன்னேன். உடனே வாலி அண்ணே என்னய்யா டியூன் என்று கேட்டு, எப்படியா இதுக்கு பாட்டு எழுதுறதுனு கேட்டார்...உடனே ஏற்கனவே இந்த டியூனுக்கு பாட்டு எழுதி இருக்காங்க என்றேன். யாரு என்றார். அதற்கு 'துப்பார்க்கு துப்பாய' குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இப்பாடலை எழுதிவிட்டார் எனக்கூறினேன். அதன் பின்னரே இப்பாடல் உருவானது என இளையராஜா கூறியுள்ளார்.

    டிக்கிலோனாவில்

    டிக்கிலோனாவில்

    சமீபத்தில் இந்த பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தி இருந்தார். இந்த பாடலில் நடனம் ஆடிய அனகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார். அப்பாடலில் அவர் நடனமாடியதை மட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Ilayaraja has shared interesting information about peru vechalum vaikama ponalum song.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X