»   »  கடல் கடந்தும் கலக்கும் "இசை சக்கரவர்த்தி".. தமிழுக்குக் கிடைத்த பெருமையைப் பாருங்க பாஸ்!

கடல் கடந்தும் கலக்கும் "இசை சக்கரவர்த்தி".. தமிழுக்குக் கிடைத்த பெருமையைப் பாருங்க பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழைக் கூறுவார்கள். அந்தத் தமிழை ஒரு ஆங்கிலேயர் அழகாக உச்சரித்துப் பாடுவதைக் கேட்டால் எப்படி இருக்கும்.

அதுதான் இந்த வீடியோவில் நாம் கண்டது. உள்ளுக்குள் சக்கரவர்த்தி என்ற பணக்காரன் படத்தில் வரும் பாடலை அவ்வளவு அழகாக இவர் பாடுகிறார். இவர் யார் எந்த நாடு என்று தெரியவில்லை. ஆனால் அப்படியே மனோ குரலை பிரதிபலிக்கிறது இவரது குரல்.

பாடலைப் பாடுவதும் இசையமைப்பதும், அதற்கு நடனம் ஆடுவதும், ரசிப்பதும் கூட வெள்ளையர்கள்தான். அப்படி ஆரவாரத்தோடு கேட்டு ரசிக்கிறார்கள் இப்பாடலை.

எல்லாவற்றையும் விட சூப்பர், அந்த வெள்ளைக்காரப் பெண் ஆடும் பரதம் கலந்த வித்தியாசமான நடனம்தான். பாடலுக்கு ஏற்ப அவர் ஆட, கூடவே அந்த ரசிக்க வைக்கும் இசையும் சேர்ந்து இளையராஜா ரசிகர்களுக்கு நிச்சயம் இது மிகப் பெரிய கெளரவம் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஜினி, கெளதமி நடித்த பணக்காரன் படத்திறகு இசையமைத்தவர் இளையராஜா. அவரது இந்த சூப்பர் ஹிட் பாடலை யாரோ நமக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் அழகாக பாடுவதைக் கேட்டபோது இந்தியா, பாகிஸ்தான் யுத்த விஷயமெல்லாம் மறந்தே போய் விடும். அந்த இனிமையில்.

English summary
A video of a foreigner singing Ilayaraja's song in Panakkaran movie is viral now in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil