»   »  29ம் தேதி உங்களது காதுகளில் கொஞ்சி விளையாட வருகிறது "இஞ்சி இடுப்பழகி" பாட்டு!

29ம் தேதி உங்களது காதுகளில் கொஞ்சி விளையாட வருகிறது "இஞ்சி இடுப்பழகி" பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தின் பாடல்களை அக்டோபர் 29ம் தேதியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

ஆர்யா, அனுஷ்கா, ஊர்வசி, பிரகாஷ் ராஜ் மற்றும் சோனல் சவுகான் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தெலுங்கில் சைஸ் ஜீரோ என்று பெயரிட்டிருக்கின்றனர்.

Inji Iduppazhagi Audio Launch

அனுஷ்கா தனது உடல் எடையை இப்படத்தில் 20 கிலோ ஏற்றி குண்டாக நடித்திருக்கிறார். நடிகர்களுக்கு இணையாக அனுஷ்கா தனது உடல் எடையை ஏற்றி நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

மேலும் ரசிகர்களைக் கவரும் வகையில் தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற, இஞ்சி இடுப்பழகி பாடலும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் 29 ம் தேதி படத்தின் இசையை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

இரண்டாம் உலகம் திரைப்படத்திற்குப் பின் ஆர்யா - அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் இஞ்சி இடுப்பழகியை, தெலுங்கு இயக்குநர் பிரகாஷ் கொவேலாமுடி இயக்கியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தெலுங்கின் மூத்த இசையமைப்பாளர் மரகதமணி. தமிழில் அக்டோபர் 29 ம் தேதி பாடல்களை வெளியிடும் படக்குழுவினர், தெலுங்கில் நவம்பர் 1 ம் தேதி வெளியிடுகின்றனர்.

மேலும் பலமுறை தள்ளிப்போன இப்படத்தை நவம்பர் 27ம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 2 மொழிகளிலும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

பாண்டிராஜின் இயக்கத்தில், சூர்யாவின் பசங்க 2 படமும் அதே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Arya - Anushka Starrer Inji Iduppzhagi Audio will be Released on October 29th in Chennai. The Film will Be Released on November 27th in Tamil, Telugu Languages More than 1500 Screens.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil