»   »  சேனல் செய்த வரலாற்று மாற்றம்... பட்ஜெட் இத்தனை கோடி... மெர்சலாக்கும் இசை வெளியீடு!

சேனல் செய்த வரலாற்று மாற்றம்... பட்ஜெட் இத்தனை கோடி... மெர்சலாக்கும் இசை வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய்யின் 'மெர்சல்' படம் பற்றி தினமும் புதுப்புதுத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று மாலை 6:30 மணிக்கு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு ஆகியோர் நடிக்கும் படம் 'மெர்சல்' கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே 'மெர்சல்' சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ட்ரெண்டிங் சரவெடி :

ட்ரெண்டிங் சரவெடி :

ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர், பாடல் டீஸர், சிங்கிள் ட்ராக் என 'மெர்சல்' படக்குழு தினந்தினம் அறிவிப்புகளாக அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. இதுவும் போதாதென, ட்விட்டர் சார்பில் அதிகாரப்பூர்வமாக 'மெர்சல் எமோஜி' வெளியிடப்பட, அதுவும் ட்ரெண்ட் அடித்தது.

டி.வி சேனல் செய்த மாற்றம் :

டி.வி சேனல் செய்த மாற்றம் :

இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சன் டி.வி நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இதனால், ஏழு மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தியின் நேரம் 10 மணிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுபோல, செய்தி போடும் நேரத்தை சன் டி.வி மாற்றுவது இதுவே முதல்முறை என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இது ஸ்பெஷல் விழா :

இது ஸ்பெஷல் விழா :

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. விழா நடத்துவதற்கான இடத்தை நடிகர் விஜய்யே தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு இது திரையுலகில் 25-வது ஆண்டு. 'மெர்சல்' படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு 100-வது படம்.

அதைக் கொண்டாடும் வகையிலேயே மிகப் பிரமாண்டமாக நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் கான்செர்ட் நடத்த இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளர்கள்

தொகுப்பாளர்கள்

இந்த விழாவை ரம்யா மற்றும் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் ஆகியோர் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

பிரமாண்டப் பொருட்செலவு :

பிரமாண்டப் பொருட்செலவு :

இந்த ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு மட்டும் தயாரிப்புக் குழு ரூபாய் 4 கோடி செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு தமிழ்ப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவு என்பது இதுவே முதன்முறை.

ஷங்கர் கலந்துகொள்வாரா? :

ஷங்கர் கலந்துகொள்வாரா? :

இந்த விழாவில் ஜெயம் ரவி, உதய்நிதி, ஆர்யா, வடிவேலு ஆகிய நடிகர்களும், விஜய் ரசிகர்களும் கலந்துகொள்கிறார்கள். இயக்குநர் ஷங்கர் உள்பட பிரபல இயக்குநர்கள் சிலரும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன்.

English summary
Vijay's Mersal audio launch to be held on today evening. Sun tv is going to telecast live.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil