twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேருந்து நிலையங்களில் மக்கள் முன்னிலையில் ஜன்னல் ஓரம் இசை வெளியீடு!

    By Shankar
    |

    சென்னை: சென்னையின் பேருந்து நிலையங்களில் ஜன்னல் ஓரம் படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    'பார்த்திபன் கனவு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். இவர் தொடர்ந்து 'பிரிவோம் சந்திப்போம்', 'மந்திரப் புன்னகை' ஆகிய படங்களை இயக்கினார்.

    தற்போது பார்த்திபன், விமல் நடிப்பில் 'ஜன்னல் ஓரம் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான 'ஆர்டினரி' என்ற படத்தின் ரீமேக்தான். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ஒரு பேருந்து மற்றும் அதன் டிரைவர் மற்றும் கண்டக்டர், அதில் பயணிக்கும் பயணிகளுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் இசை வெளியீடு வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    படத்தின் கதைக்கேற்ப வித்தியாசமாக படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதற்காக, சென்னையின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் பொதுமக்கள் முன்னிலையில் இசை வெளியீடு நடக்கிறது.

    Jannal Oram audio launch at Bus stands

    காலை 8 மணிக்கு வடபழனி பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கிறது ஜன்னல் ஓரம் இசை வெளியீடு விழா. படத்தின் நட்சத்திரங்கள், இயக்குநர் உள்பட அனைவரும் ஒரு சிறப்புப் பேருந்தில் கிளம்பி, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் போன்ற பேருந்து நிலையங்களில் மக்கள் மத்தியில் இசையை வெளியிட்டுவிட்டு, மாலை மீண்டும் வடபழனி கமலா தியேட்டருக்கு திரும்புகிறது.

    அங்கு வைத்து, நடிகர் சூர்யா படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிடுகிறார்.

    English summary
    Karu Palaniyappan's Jannal Oram movie audio will be launched at Chennai bus stands before public.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X